வீட்டின் கதவை உடைத்து பணம், வெள்ளி கொலுசுகள் திருட்டு!
கோவில்பட்டி அருகே கடலையூர், முதலியார் தெருவைச் சேர்ந்தவர் வெயில்முத்து. இவருடைய மனைவி சத்யா (55). இவர் நேற்று காலை சுமார் 9 மணியளவில் , வீட்டை பூட்டிவிட்டு எட்டையாபுரத்தில் வசிக்கும் தனது மகள் சசிகலாவின் வீட்டிற்குச் சென்றார்,. இரவில் அங்கு தங்கினார்,

பின்னர் , இன்று (ஜூலை 8) காலையில் சத்யா தனது வீட்டிற்குத் திரும்பினார்,. அப்போது வீட்டின் முன் பக்கக் கதவு உடைக்கப்பட்டிருநததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் அறையிலிருந்த பீரோவின் கதவும் திறக்கப்பட்டிருந்தது.
பீரோவைச் சோதித்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.50,000 ரொக்கம் மற்றும் 2 ஜோடி வெள்ளி கொலுசுகள் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. சத்யா ஊரில் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து சத்யா அளித்த புகாரின் பேரில், நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.







