கோவில்பட்டி கல்லூரியில் போதை பொருள், புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு
Oplus_16908288
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி சுயநிதிப்பாடப்பிரிவுகளின் குறைதீர்க்கும் மன்றம் மற்றும் வணிக பகுப்பாய்வு துறையோடு இணைந்து போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கினை மூன்றாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு நடத்தியது.

கல்லூரி வணிக பகுப்பாய்வு துறைப் பேராசிரியர் கிருபாகரன் அவர்கள் வரவேற்பு உரையாற்றினார். இயக்குநர் மபா. மகேஷ்குமார் தலைமை உரையாற்றினார். கே. ஆர். கல்லூரியின் உயிர் வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் சுப்புராயலு போதைப் பொருள் பற்றியும், அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார். மேலும் உணவு முறைகள் மற்றும் நல்ல பழக்கவழக்கங்களையும் எடுத்துரைத்தார்.
புற்றுநோய் விழிப்புணர்வு

கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி சுயநிதிப்பாடப்பிரிவுகளின் மாணவர் குறைதீர்க்கும் மன்றம், மற்றும் புள்ளியியல் துறை நெல்லை கேன்சர் கேர் சென்டருடன் இணைந்து புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கினை அனைத்து மூன்றாம் ஆண்டு இளங்கலை மாணவிகளுக்கு நடத்தியது.
கல்லூரி முதல்வர் ஏ. பாண்டியராணி தலைமை உரை ஆற்றினார். தகவல் தொழில்நுட்ப அறிவியல் துறைப் பேராசிரியர் வீரலட்சுமி மற்றும் தமிழ் துறைப் பேராசிரியர் அனுசியா தேவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்திருநெல்வேலியில் அமைந்துள்ள ”நெல்லை கேன்சர் கேர் சென்டரின்” மருத்துவர் அபிராமி புற்றுநோய்கள் பற்றியும், அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.

மேலும் புற்றுநோய்களைத் தடுக்கும் உணவு முறைகள் பழக்கவழக்கங்களையும் எடுத்துரைத்தார். அவர்கள் மார்பகம் மற்றும் வாய்ப்புற்றுநோய்களைத் தாமே கண்டறிவதற்கான வழிமுறைகளை செய்முறை மூலம் எடுத்துரைத்தார்.







