கோவில்பட்டி எஸ் எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான பசுமை கழகத்தின் தொடக்க விழா நடைபெற்றது. வணிகவியல் துறை மாணவி பிரபா வரவேத்க்று பேசினார்,. கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார், கல்லூரி முதல்வர் முனைவர் செல்வராஜ் மற்றும் வணிகவியல் துறையின் தலைவர் விஜய கோபாலன் முன்னிலை வகித்தனர். பசுமைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் வெற்றிச்செல்வி கழகத்தின் உறுப்பினர்களை அறிமுகம் செய்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர் சிறப்பு விருந்தினர்களாக வன சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி […]
கடந்த ஆண்டு தவெக பிரசாரத்தின்போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சோக சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசுப் பணிக்கான ஆணை வழங்க உள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக பிரசாரத்தின்போது இறந்தவர்கள் என்பதால் தவெக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா என்கிற நியாயமான கேள்வி முன் வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். […]
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வில்லிசேரி பகுதிக்கு உட்பட்ட சத்திரப்பட்டியில் சீமை கருவேல மரங்களை அகற்றும் திட்டத்தை மதிமுக பொதுசெயலாளர் வைகோ கொடியசைத்துத் துவக்கி வைத்தார்…. அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது: ஸ்டெர்லைட் பிரச்சினை, முல்லை பெரியாறு அணை பிரச்சினை, சீமை கருவேல… மரங்கள் அகற்றம் என பல்வேறு பிரச்சினைகளுக்காக 20 ஆண்டு காலமாக போராடி வருகிறேன். முல்லை பெரியாறு அணையை . உடைக்க கேரளா அரசு தீவிரமாக இருந்தபோது, அதை எதிர்த்து நடைபயணம், […]
தூத்துக்குடி துறைமுக சாலையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் தலா 500 மெகாவாட் திறன் கொண்ட 2 மின் உற்பத்தி அலகுகள் இயங்கி வருகின்றன. மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, சேமிப்புக் கிடங்குகளில் குவித்து வைக்கப்படுகிறது. இந்த நிலையில், நிலக்கரி குவியலில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. அப்போது வீசிய பலத்த காற்றின் காரணமாகத் தீ மளமளவெனப் பரவியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் […]
தமிழகத்தில் உள்ள அனைத்துத் தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் பிற வாரியப் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை விளம்பரப் பலகையில் வெளியிட வேண்டும் என மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவின்படி தனியார் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை பிறப்பித்திருந்தார். மாநில தகவல் ஆணையம் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் பிறப்பித்த இந்தச் சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே. பழனியப்பன் சென்னை உயர் […]
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண் “குழந்தைகளை காப்போம் மற்றும் பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பிரபு தொடக்கி வைத்தார்.பேராசிரியர் லாவண்யா வரவேற்புரை நிகழ்த்தினார் சிங்கப்பெண் அதிரடிப்படை காவல் ஆய்வாளர் காந்திமதி பெண்கள் சமுதாயத்தில் சந்திக்கக்கூடிய பல்வேறு பிரச்சினைகள் பற்றியும் அப்பிரச்சினையிலிருந்து எவ்வாறு தன்னை தற்காத்து கொள்வது என்பது பற்றியும் எடுத்துரைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வழக்கறிஞர் விஜயகுமார் மக்களுக்கான அடிப்படை உரிமை பற்றியும் பெண்களுக்குன்டான பல்வேறு […]
பணி நிறைவு பெற்ற கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி முதல்வர் சுப்புலட்சுமிக்கு பாராட்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற மின்வாரிய பொறியாளர் சந்திரன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் திருமலை முத்துசாமி முன்னிலை வகித்தார். பணி நிறைவு பெற்ற கல்லூரி முதல்வர் சுப்புலட்சுமி ஏற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, அவருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், டாக்டர் மாசிலாமணி, ஓய்வு பெற்ற அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் நம்.சீனிவாசன், பேராசிரியர் […]
கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்யக்கோரி கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு, மந்தித்தோப்பு வியாபாரிகள் சங்கம், மற்றும் குடியிருப்போர் சங்கங்கள் சார்பாக பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் போராட்டங்கள் நடத்தியும் எந்தவேலையும் நடைபெறவில்லை நகராட்சி நிர்வாகம் திடீரென்று லாரி, ஜேசிபி வாகனங்களுடன் வந்து மேடு பள்ளங்களை மட்டும் நிரப்புவோம் என்று பணிகளை துவக்கினார்கள். இதனால் அதிருப்தி அடைந்த வியாபாரிகளும், பொதுமக்களும் முழுமையாக ரோடு போடவேண்டும், ‘பேட்ச் ஒர்க்’ செய்யவேண்டாம் என வலியுறுத்தி தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை […]
கோவில்பட்டி ராஜீவ்நகர் ஈ.பி. காலனி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சேவியர் மனைவி அனிதா (வயது 45). இவர் கடந்த திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள காசி அம்மன் கோயில் அருகே தனது மொபட்டை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள், அனிதா எதிர்பாராத நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 3.5 சவரன் எடையுள்ள தங்கச் செயினை திடீரென பறித்துக் கொண்டு கண் […]
கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சௌபாக்கியா மகாலில் நடந்தது. ரோட்டரி சங்க கடந்த ஆண்டு தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட கிளப் சர்விஸ் சேர்மன் விநாயகா ரமேஷ் முன்னிலை வகித்தார். ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் ஷாஜகான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2026-27ம் நிதியாண்டிற்கு தலைவராக முத்து முருகன், செயலாளராக ரமேஷ் குமார், பொருளாளராக சீனிவாசன் உட்பட புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து பள்ளி […]







