கோவில்பட்டி எஸ் எஸ் டி.எம். கல்லூரியில் பசுமை கழகம் தொடக்கம்
கோவில்பட்டி எஸ் எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான பசுமை கழகத்தின் தொடக்க விழா நடைபெற்றது. வணிகவியல் துறை மாணவி பிரபா வரவேத்க்று பேசினார்,.

கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார், கல்லூரி முதல்வர் முனைவர் செல்வராஜ் மற்றும் வணிகவியல் துறையின் தலைவர் விஜய கோபாலன் முன்னிலை வகித்தனர்.
பசுமைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் வெற்றிச்செல்வி கழகத்தின் உறுப்பினர்களை அறிமுகம் செய்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர் சிறப்பு விருந்தினர்களாக வன சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வன அதிகாரி அழகர்ராஜ் கலந்து கொண்டார்கள் .
மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவாக சுற்றுச்சூழல் எவ்வாறு மாசுபடுகிறது என்பதையும் அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பதற்கான விழிப்புணர்வையும் மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்

மேலும் பசுமை கழகத்தின் சார்பாக கல்லூரியில் அனைத்து துறை மாணவ மாணவியர்களுக்கு ஓவியப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டி நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
விழா முடிவில் மாணவி சுமித்ரா நன்றி கூறினார்,







