`தன்னார்வத் தொண்டு’ விழிப்புணர்வு கருத்தரங்கு
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் சுயநிதி பாடப்பிரிவின் வணிகவியல் தொழில்நெறிகணக்கியல் துறை சார்பில் நடத்தப்பட்ட சங்கத் தொடக்க விழா மற்றும் மாணவர்களிடையே தன்னார்வத் தொண்டு என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கல்லூரியின் செயலர் ப.மகேந்திரன், கல்லூரி முதல்வர் அ.பாண்டிராணி மற்றும் இயக்குநர். பா.மகேஷ்குமார் வழிகாட்டுதலின் நடந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக, இந்திய கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் நட்பிற்கான சங்கத்தின் மாநில செயலாளர் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவர். கே. தமிழரசன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடையே தன்னார்வத் தொண்டு முக்கியத்துவம் மற்றும் இதன் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.
வணிகவியல் தொழில்நெறிகணக்கியல் துறையில் பயிலும் 150க்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வணிகவியல் தொழில்நெறிகணக்கியல் துறை தலைவர் .கு.மாரியப்பன், மாணவ மாணவியர்கள் செய்திருந்தனர்.







