தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் மனைவி ஜாய்ஸ் (வயது 45). இவர் தூத்துக்குடி தெற்கு புதுத் தெருவில் உள்ள மாநகராட்சி T.D.T.A. நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். கடந்த 19-ம் தேதி ஜாய்ஸின் வகுப்பில் பயிலும் முதலாம் வகுப்பு மாணவி ஒருவர் சரியாகப் படிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை, அந்த மாணவியைப் பிரம்பால் தாக்கியதில் மாணவியின் கையில் காயம் ஏற்பட்டது. பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற மாணவி, தனது கையில் […]
கோவில்பட்டி கோ.வெ.நா கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிக்கு வணிகவியல் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி ஆசியாபார்ம்ஸ் நிறுவன உரிமையாளர் பாபு கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். நிகழ்வின் சிறப்பம்சமாக மஞ்சள் பைக்கு திரும்புவோம் என அனைவரும் உறுதி ஏற்றனர். இதனை தொடர்ந்து இளம் தொழில் முனைவோர் ஆர்த்தி, கேக் தயாரிப்பாளர் குளோரி, அழகுக்கலை நிபுணர். வித்யா குமார், மருதாணி கலைஞர் தாரணி, ஆராய்ச்சி மாணவர் தீபா மற்றும் தையல் கலைஞர் வீரலட்சுமி […]
முதலமைச்சருடன் சந்திப்பு: அதிமுக ஆட்சியில் 3 முறை முதல் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம்,
அ.தி.மு.க. ஆட்சியில் 3 முறை முதல்-அமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. பல சிக்கல்களை சந்தித்தது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் துணை முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். அதன்பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் அதிரடியாக அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், அய்யப்பன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்தனர். இதனையடுத்து அ.தி.மு.க.வை மீட்க சட்ட நடவடிக்கை எடுத்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜனதா ஆதரவுடன் […]
கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த திருப்பதி மகன் மனோஜ்குமார் (வயது 17). நேற்று இரவு மனோஜ் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் அவர்களை நோக்கிப் பாய்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த கொடூர காட்சியை பார்த்து அங்கிருந்தவர்கள் தப்பியோடினர்., மனோஜ் தடுமாறிக் கீழே விழுந்து விட்டார். விரட்டி வந்தவர்கள் மனோஜை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர், ரத்த வெள்ளத்தில் கிடந்த மனோஜை அக்கம் […]
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த சீனி முகம்மது நியாஸ் (19) மற்றும் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சந்தோஷ்குமார் (19) ஆகிய இருவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான நல்லகண்ணு சென்னையில் நேற்று காலமானார்.இன்று அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மாணவர்கள் ஆய்வுக்காக தானமாக வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று மாலை கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நல்லகண்ணுவின் திருஉருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பயணியர் விடுதி முன்பிருந்து அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்ட மவுன ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு […]
மத தீவிரமயமாக்கலை சித்தரிப்பது போன்று வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக ‘தி கேரளா ஸ்டோரி 2’ தயாரிக்கப்பட்டு நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை தடை செய்யகோரி கேரள ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த படத்தில் கேரளாவை வகுப்பு வாத கண்ணோட்டத்தில் காட்டுவதாகவும், இது சட்டம், ஒழுங்கை […]
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தனது ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ‘பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்க வேண்டும், வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு முறையும் ஐகோர்ட்டை நாடி அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும்’ என்று ராஜேந்திர பாலாஜி கோரி இருந்தார். இந்த வழக்கு சுப்ரீம் […]
கோவில்பட்டி கோ வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை மற்றும் சீருடைப் பணியாளர்கள் பயிற்சி முகமை இணைந்து இரண்டு நாள் பயிலரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த பயிலரங்கத்தில் கல்லூரியின் இயக்குனர்பி. மகேஷ்குமார் தலைமை உரையாற்றினார்கள். முதல் நாள் நிகழ்வாக தீயணைப்பு துறை களின் வேலைவாய்ப்புகள் பற்றி, தர்ஷன் தீயணைப்பு மற்றும் பயிற்சி கழகத்தின் நிர்வாக இயக்குனர் ஆர் மணிகண்டன் சிறப்புரை ஆற்றினார். இரண்டாவது நாள் நிகழ்வாக இந்திய ராணுவத்தில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றியும் அந்த […]
ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் மாவட்ட ஆக்கி அணி தேர்வு கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று(பிப்ரவரி 26) ) காலை நடைபெற்றதுமாணவர்கள் பிரிவில் 150 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர் மாணவிகள் பிரிவில் 75 வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர் காளிமுத்து பாண்டி ராஜா காமராஜ் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமார் மாயாண்டி ஆகியோர் தேர்வு குழு உறுப்பினர்களாக இருந்து வீரர்களை தேர்வு செய்தனர் மாணவர்கள் […]







