,கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டார்க் லைட் செஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடந்தது. பல்வேறு வயது பிரிவின்டருக்கு இடையே நடந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ப்பள்ளி மாணவர்களான சதுரங்க வீரர்கள் பங்கேற்றனர்,. போட்டி நிறைவில் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார், செஸ் அகாடமி நிர்வாகிகள் கருப்பசாமி, மணிகண்டன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் […]
தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் கோவில்பட்டி மண்டலம், சார்ப்பில் திமுக துணை பொதுசெயலாளர் கனிமொழி எம்.பி/. மற்றும் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. எங்களது நீண்டநாள் கோரிக்கையான “வடுகர்களை *மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் கம்மவார்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாடு அரசாணை எண்.2 நாள் 7.1.2021 ன் படி தெலுங்கு மொழி பேசும் நம் இன மக்களுக்கு மொழிவாரி சிறுபாண்மையினர் என சான்று தடையில்லாமல் (இணையதளம் […]
தமிழக வெற்றிக் கழகத்தின் 3 ,ம் ஆண்டு தொடக்க விழா சென்னை அருகே பனையூரில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது,. விழாவில் கட்சி தலைவர் விஜய் பேசுகையில் கூறியதாவது:- தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி இந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக வளர்ந்துள்ளோம். நீங்கள்தான் எனக்கு பலம். உங்களை நம்பித்தான் நானும் இருக்கிறேன். கட்சியும் இருக்கிறது. கட்சியில் உள்ள தோழர்கள், தொண்டர்களுக்கு தலைமைத் தொண்டனான எனது வாழ்த்துகள். 1977 ஜூன் மாதம் எம்.ஜி.ஆர். ஒரு பேட்டி […]
தைப்பூசத்தை முன்னிட்டு கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் 53வது மாத அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு. தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் ,ஜீவ அனுக்கிரக அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன், பசுமை இயக்கம் செந்தில், செல்வ விநாயகா ஸ்டோர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக கோவில்பட்டி கடலை மிட்டாய் வியாபாரிகள் சங்கத் தலைவர் கார்த்தீஸ்வரன் ,செந்தில் ஜூவல்லர்ஸ் சரவணன் ,தமிழக […]
கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோவில் தைப் -பூசத் திருவிழா ஜனவரி 23ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தனர். இன்று 10ம் நாள் தைப்பூசத்தை யொட்டி தேரோட்டம் நடந்தது. காலை 7 மணிக்கு உற்சவர் கழுகாசலமூர்த்தி , வள்ளி, தெய்வானை தேரில் எழுந்தருளி னர். காலை 9.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கி யது. நிலையிலிருந்து புறப் பட்ட தேர், தெற்குரதவீதி, […]
தூத்துக்குடி முள்ளக்காடு, நேருஜிநகர் பகுதியை சேர்ந்த ரத்தினதுரை (வயது 70), அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 10-ம் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் இவரது மளிகை கடையின் ஷட்டர் கதவின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த 10 ரூபாய் நாணயங்கள் மற்றும் அரை லிட்டர், ஒரு லிட்டர் குளிர்பானங்கள், சிப்ஸ், பிஸ்கட் வகைகள் 5 உள்ளிட்ட சிற்றுண்டி வகைகளை திருடிச் சென்றனர். தெருவில் நாய்கள் குறைக்காமல் இருக்க பிஸ்கட் மற்றும் சிப்ஸ்களை […]
நாடாளுமன்ற மக்களவையில் இன்று(பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலாசீதாராமன் தாக்கல் செய்தார். இதில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:- *ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு வருகிறது. *திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய டிசம்பரிலிருந்து மார்ச் வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. *வருமான வரி தாக்கல் செய்யும்போது பொய் கணக்கு காட்டினாலோ, தவறான தரவுகள் வழங்கினாலோ 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் *வருமான […]
கோவில்பட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில்,தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளி பயனாளிகள் 36 பேருக்கு ஸ்கூட்டர் வழங்கினார். விழாவில் கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமன்சூ மங்கல்,நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஆணையாளர் சுகந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், திமுக நிர்வாகிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு தன்னாட்சிக் கல்லூரியின் சுயநிதிப் பாடப்பிரிவுகளின் வளாகத்தில் அமைந்துள்ள கல்வி விநாயகர் கோவிலின் 22-வது ஆண்டு வருஷாபிஷேகம் நேற்று 31.01.2026 சனிக்கிழமை நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு யாகத்துடன் தொடங்கி நன்னீராட்டுடன் அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடைபெற்றன. இதில் கல்லூரிச் செயலர் . ப.மகேந்திரன், முதல்வர் மூ.சுப்புலெட்சுமி சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் .பா.மகேஷ்குமார், தன்னாட்சிக்குழு உறுப்பினர் . கணேஷ்ராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.







