நடிகர் கார்த்தியின் 27-வது படத்தை விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ’96’ படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்குகிறார். இந்த படத்துக்கு ‘மெய்யழகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூர்யா – ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்கிறார். மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு […]
இந்த எதிர்பார்ப்பை தொடர்ந்து, கடந்த மாதம் 23-ம் தேதி இப்படம் வெளியானது. சினிமா நட்சத்திரங்கள் உள்பட பலர் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர். இந்த படமானது ரிலீஸுக்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடம் பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. `கூழாங்கல்’ இயக்குனர் பி.எஸ்.வினோத் இயக்கத்தில் சூரி நடித்த திரைப்படம் ‘கொட்டுக்காளி’. சிவகார்த்திகேயன் தயாரித்த இத்திரைப்படத்தில் நடிகை அன்னா பென் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் இதுவாகும். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இல்லாதது படத்தின் […]
சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சீசிங் ராஜா ஆந்திராவில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை சென்னை அழைத்து வந்த நிலையில், நீலாங்கரையில் வைத்து போலீசாரை தாக்கிவிட்டு சீசிங் ராஜா தப்ப முயன்றதாக சொல்லப்படுகிறது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் ரவுடி சீசிங் ராஜா சுட்டுக்கொல்லப்பட்டார். ரவுடி சீசிங் ராஜா என்கவுண்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீசிங் ராஜா மீது 6 கொலை வழக்குகள் உட்பட 39-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. […]
கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் செண்பகப்பேரி கிராமம் துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செண்பகராஜ் என்பது மகன் பாண்டியராஜ் (vவயது 25). இவர் கட்டிட தொழில் செய்துள்ளார். இன்று காலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர். நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை தேடி சென்றபோது, அங்குள்ள கண்மாய் பகுதியில் வெட்டு காயங்களுடன் பாண்டியராஜ் சடலமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர், பாண்டிராஜை கொலை செய்தது யார் என்பது தெரியவில்லை. இது […]
அம்மா உணவகங்கள் பற்றி சர்ச்சை பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும்
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி அம்மா உணவகங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது: ஆர்.எஸ்.பாரதி போன்ற கார்ப்பரேட் கைக்கூலிகளுக்கு ஒரு நாள் என்பது 24 மணி நேரம்! பலருக்கு ஒரு நாள் என்பது மூன்று வேளை!வறுமை-பசி என எதையாவது தங்கள் வாழ்க்கையில் திமுக குடும்பம் உணர்ந்திருந்தால் அம்மா உணவகத்தை மூட […]
கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த தங்கம் விலை, அதே மாதம் 22-ந்தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக அதன் விலை அன்றைய தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. அதன் தொடர்ச்சியாக விலை குறைந்து கொண்டே வந்து ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த ஆறுதல் சில நாட்கள் மட்டுமே நீடித்தது. கடந்த […]
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது; மத்திய இணை மந்திரி எல்.முருகன் சொல்கிறார்
நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேயர், துணை முதலமைச்சராக இருக்கும்போது, சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவோம், சிங்கப்பூராக மாற்றுவோம் என்றார். அவர் தற்போது முதலமைச்சராக உள்ளார். ஆனால் கூவம் நதிக்கு ஒதுக்கிய பணத்தை கூவத்துக்குள் போட்டு விட்டார்கள். கூவம் ஆற்றை சீர்படுத்த […]
தூத்துக்குடி நகரத்தை பசுமையான நகரமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதன் ஒரு பகுதியாக சாலை ஓரங்களில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. அந்த பணியை தொடக்கி வைக்கும் விதத்தில் தூத்துக்குடி மாநகராட்சி இ.பி காலனியில் கனிமொழி எம்.பி., அமைச்சர் .பி.கீதா ஜீவன் முன்னிலையில் இன்று 23.9.24) மரக்கன்றுகளை நட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர்.க இளம்பகவத், மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், உதவி காவல் கண்காணிப்பாளர் […]
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில், வட்டார விஸ்வகர்மா மக்கள் சார்பாக, தியாகராஜ பாகவதரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் விஸ்வகர்மா ஆதாரனை ஜெயந்தி விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டு வண்டிகள் எல்கை பந்தயத்தை விளாத்திகுளம் அதிமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், விஸ்வகர்மா சமுதாய தலைவர்கள் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சின்னமாடு, பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், ராமநாதபுரம், […]
தூத்துக்குடி எட்டயபுரம் சாலை சங்கரப்பேரி விலக்கு பகுதியிலுள்ள திடலில் 3-வது நெய்தல் கலைத் திருவிழா வரும் அக்டோபர் 11ம் தேதி – 13ம் தேதி வரை (3 நாட்கள்) மற்றும் தூத்துக்குடி 5வது புத்தகத் திருவிழா வருகின்ற அக்.3 முதல் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி “நெய்தல் திருவிழா மற்றும் புத்தக கண்காட்சி” வாசகங்கள் அடங்கிய […]







