திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (22.10.2025) கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளினார். இதையடுத்து காலை 7 மணியளவில் யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. தொடர்ந்து மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், […]
இந்தியாவில் எவ்வளவு தங்கத்தை வீட்டில் வைத்திருக்கலாம்? வருமான வரி துறை இதற்காக எத்தகைய விதிமுறைகளை வகுத்துள்ளது? என்பது குறித்து வருமான வரித்துறையின் தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. வருமான வரித்துறை அறிவுறுத்தலின்படி, இந்தியாவில் ஒரு நபர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பதற்கு சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு எதுவும் இல்லை.அதாவது, ஒருவர் பெற்றுள்ள தங்கத்தின் மூல ஆதாரத்தை ஆவணங்களுடன் நிரூபிக்க முடிந்தால், அவர் எவ்வளவு அளவு தங்கம் வைத்திருந்தாலும் சட்டப்படி குற்றமாகாது.வாங்கிய தங்கத்திற்கு ரசீது, பரிசாக […]
இலங்கையில் இருந்து கடந்த சில மாதங்களுக்குமுன் ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் சென்னைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த பயணிக்கு விமானத்தில் உணவு வழங்கப்பட்டது. அந்த உணவில் தலைமுடி இருந்துள்ளது. இதுகுறித்து விமான ஊழியர்களிடம் அந்த பயணி முறையிட்டுள்ளார். ஆனால், அந்த பயணிக்கு விமான பணியாளர்கள் வேறு உணவு வழங்கவில்லை. இதையடுத்து, சென்னை தரையிறங்கிய உடன் அந்த பயணி ஏர் இந்தியா விமான நிறுவனம் மீது போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தலைமுடி விழுந்த உணவை […]
கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, புனே, சீரடி உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி ஆகிய வெளிநாட்டு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் சராசரியாக 32 விமானங்கள் இயக்கப்படுகின்றன. கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரம் பேர் தினமும் வந்து செல்கின்றனர். இதுதவிர உள்நாடு, வெளிநாடுகளுக்கு கோவை விமான நிலையத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த சரக்கக அலுவலகத்தில் இருந்து […]
அயல்நாடுகளுக்கு செல்பவர்கள் தமிழக அரசின் நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும்; தூத்துக்குடி மாவட்ட
அயல்நாடுகளுக்கு பணி, கல்வி பயிலச் செல்பவர்கள் அயலகத் தமிழர் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பு, கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக தமிழர்கள் அயல்நாடுகளுக்கு புலம்பெயர்வது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி அரசு மற்றும் அரசு சாரா உறுப்பினர்கள் 15 நபர்களைக் கொண்டு கார்த்திகேய சிவசேனாபதி தலைமையில் அயலகத் தமிழர் நல […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த கொடுந்துயர நிகழ்வு குறித்த உண்மையைக் கண்டறிய சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ள விசாரணை ஆணையத்தில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் பணியாற்றும் அதிகாரிகள் பங்கேற்கலாம், ஆனால், அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டிருக்கக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது இல்லையா? தமிழ்நாட்டில், தமிழர்கள் மரண […]
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள். சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள மகள் கனிமொழி உடன் வசித்துவருகிறார். இவருக்கு அண்மை காலமாகவே அஜீரண கோளாறு மற்றும் வயிற்று வலி பிரச்சினை இருந்து வருகிறது. இதற்காக கடந்தாண்டு ஜெர்மனியில் உள்ள பிரபல மருத்துவமனைக்குச் சென்று 20 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று இருந்தார். இந்தநிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ராசாத்தி அம்மாள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை […]
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 100). அவர் கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நல்லக்கண்ணுவை டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வந்தனர். நல்லகண்ணுவுக்கு வயது மூப்பின் காரணமாக நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நல்லகண்ணு […]
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கரூர் துயரச்சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனதையும் உலுக்கியது. இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி, உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அரசின் நடவடிக்கைகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கிறேன்.கரூர் பிரசாரத்திற்கு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. வழக்கமாக அரசியல் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டது கரூர் பரப்புரைக்கு தவெக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட […]
திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் கூறி இருப்பதாவது:- * மதுரை ரெயில்வே கோட்டத்தில் பல இடங்களில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் செங்கோட்டை –மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 16, 17, 18 மற்றும் 22-ந் தேதிகளில் செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். * நாகர்கோவில் மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 23 மற்றும் 26-ந் தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







