கோவில்பட்டி நகராட்சியின் (பொறுப்பு) ஆணையர் ஜஹாங்கீர் பாஷா மாற்றப்பட்டு, புதிய ஆணையராக வீரமுத்துகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். கோவில்பட்டி நகராட்சி ஆணையருக்கான முழு கூடுதல் பொறுப்பில் மாற்றம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி, உத்தரவு பிறப்பித்துள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர் அ. ஜஹாங்கீர் பாஷா கோவில்பட்டி நகராட்சி ஆணையராக முழு கூடுதல் பொறுப்பு வகிக்க நியமித்து கடந்த 14.7.2026 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நிர்வாக நலன் கருதி தற்போது ரத்து செய்யப்படுகிறது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உதவி […]
தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்காகப் புதிதாக 4 கிலோவாட் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு ஆகஸ்ட் 28 முதல் நேரடி கள ஆய்வு இன்றியே மின் இணைப்பு வழங்கப்படும் எனத் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை ஏற்கனவே வெளியிட்டிருந்தார். அதில், “மின் பகிர்மான கழகத்தில் புதிய மின் இணைப்பு கோரும் ஒருமுனை வீட்டு மின் இணைப்பு (நீட்டிப்பு அல்லது மேம்பாட்டுப் பணி எதுவும் […]
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கால் உயிரிழப்பு எண்ணிக்கை 200 ஐ தாண்டியது; ஆயிரத்துக்கும் அதிகமானோர் நிலை
வடக்கு நேபாளத்தில், ஆற்றின் மேல் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக எல்லை நதி ஒன்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இத்துயரச் சம்பவத்தில் இதுவரை 162 பேர் உயிரிழந்ததுடன், சாலைகள் மற்றும் மின்சாரக் கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் வடக்கே அமைந்துள்ளது ரசுவா மாவட்டம். இந்த மாவட்டத்தின் வடக்கு பகுதியில் உள்ள ரசுவாகடி பகுதி, நேபாளம்-திபெத் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. […]
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் நேற்று முன்தினம் அறிவித்தார். தமிழக அரசின் இந்த அதிரடி முடிவுக்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது. சட்டசபையில் இருந்து அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளி நடப்பு செய்தனர். இதற்கிடையே மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பரந்தூர் விமான நிலையத்திட்டம் தொடர்பான விவாதம் நேற்று மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா கூறியதாவது; மாற்றுத்தொழில் திட்டங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் […]
நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் திடீர் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் தமிழர்கள் உள்பட 400க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வெள்ளத்தில் 8 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் ஹெலிகாப்டர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், நீர்மட்டம் அதிகமாக இருப்பதால் சில பகுதிகளில் ஹெலிகாப்டர்களை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கும்பகோணத்தை சேர்ந்த 22 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக […]
இன்புளுவென்சா என்ற வைரசால் ஏற்பட்டுள்ள சுவாச தொற்று நோய் பன்றிக்காய்ச்சல் ஆகும். முதலில் பன்றிகளில் இருந்து பரவிய இந்த பன்றிக்காய்ச்சல் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. பன்றிக்காய்ச்சல் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. ராஜஸ்தான், டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி மாதம் தமிழகத்தில் 19 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 339 […]
மலையாள மொழியில் பாரம்பரியமாக ‘கேரளம்’ என்றே அழைக்கப்பட்டு வந்த நிலையில், மாநிலத்தின் பெயரை அனைத்து மொழிகளிலும் மாற்ற கோரி கேரள மாநில சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை தொடர்ந்து, இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் மற்றும் மத்திய அரசின் பதிவேடுகளிலும் இப்பெயர் மாற்றத்தை நடைமுறைப்படுத்த அரசியல் சாசன பிரிவு 3-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் திரவுபதி […]
தமிழக அரசுப் பணிகளில் நேரடி பணி நியமனம் வழியே நிரப்பப்படும் அனைத்து காலியிடங்களிலும் 20 சதவீதம் இடங்களை தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 2010-ம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், ஒரு பணிக்கு விண்ணப்பித்தவர் அரசு பணியில் இருக்கிறாரா, இல்லையா என்பதை ஆராயாமல் இதுநாள் வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு முன்னுரிமை வழங்கி வந்தது. இந்த சூழ்நிலையில் சென்னை ஐகோர்ட்டு, ஏற்கனவே அரசுப் பணியில் […]
மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது வழக்கம். நீர் இருப்பை பொறுத்து குறித்த நேரத்திலோ அல்லது கால தாமதமாகவோ அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும். இந்த பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர் உட்பட 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் சுமார் […]
தூத்துக்குடியில் ரூ.7 ஆயிரம் கோடியில் மின் உற்பத்தி வாகனஉற்பத்தி தொழிற் பூங்கா உள்பட மொத்தம் 22 முக்கிய அறிவிப்புகளை சட்டசபையில் தொழிற்துறை மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டார். அவர் இது பற்றி கூறியதாவது:- தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் பகுதியில் 1,294 ஏக்கர் பரப்பளவில் ரூ.7,000 கோடி முதலீடு மற்றும் 10,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சிப்காட் சார்பில் மின் வாகன உற்பத்தித் தொழிற்பூங்கா அமைக்கப்படும். முடிவைத்தானேந்தல் சிப்காட் பூங்கா: முடிவைத்தானேந்தல் பகுதியில் ரூ.5,000 […]







