கோவில்பட்டியில் அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அறக்கட்டளையின் சார்பாக வ.உ.சி பிறந்தநாள் , ஆசிரியர் தினம் , விருது வழங்குதல் என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. பஜ்ரங் நர்த்தனயலாயா பள்ளி மாணவிகள் நடனத்தால் அனைவரையும் வரவேற்றனர். விழாவிற்கு அறக்கட்டளை நிறுவனர் மூத்ததமிழிஞர் திருமலை முத்துசாமி தலைமை தாங்கினார். மகாத்மா காந்தி அறக்கட்டளை தலைவர் திருப்பதிராஜா, செயலாளர் சுப்பராயலு, கழுகுமலை திருவள்ளுவர் மன்றத்தின் தலைவர் பொன்ராஜ் பாண்டியன், செயலாளர் முருகன்,தல்லாசிரியர் ராஜாமணி, ஒய்வு பெற்ற வேளாண் துறை கண்காணிப்பாளர் நடராஜன் ,மதுரை […]
80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இடையிலான ஆக்கி போட்டி கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் கடந்த மூன்று மாதங்களாக போட்டிகள் நடந்து வந்தன. இப் போட்டியில் தூத்துக்குடி சீனாவானா அரசு மேல்நிலைப்பள்ளி, கயத்தார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாலாட்டின்புத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாடார் மேல்நிலைப்பள்ளி […]
கோவில்பட்டியில் வ.உ.சி.சிலைக்கு ரோட்டரி சங்கம், த.வெ.க., கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் மரியாதை
நாட்டின் சுதந்திரத்திற்காக ஆங்கிலேய அரசை எதிர்த்து போராடிய கப்பலோட்டிய தமிழன் வ. உ.சிதம்பரனாரின் 155 வது பிறந்த தினம் இன்று செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது இதையொட்டி கோவில்பட்டி பாரதி நகரில் உள்ள வ உ சி யின் கொள்ளுப்பேத்தி செல்வியின் இல்லத்தில் உள்ள திருவுருவப்படத்திற்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. வ உ சி யின் கொள்ளுப்பேத்தி செல்விக்கு சாகித்ய அகடாமி விருதாளர் சோ.தர்மன் சால்வை அணிவிக்க கோவில்பட்டி ரோட்டரி […]
தூத்துக்குடியில் உப்பளங்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரப் பகுதிகளை அழித்துக் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிடாவிட்டால், தொழிலாளர்களைத் திரட்டி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் எனச் சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. தூத்துக்குடி முள்ளக்காடு, கோவளம், முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய கோவளம் பசுவந்தனை தண்பாடு சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம், தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொருளாளர் பொன்ராஜ், நிர்வாகிகள் ரகுபதி, முகேஷ் […]
இயற்கையை சுத்தமாக பராமரிப்பதிலும்,நோய்கள் பரவுவதை தடுப்பதிலும் கழுகுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.பல கழுகு இனங்கள் உணவு மாற்றம் மற்றும் நச்சுத்தன்மை காரணமாக அழிவின் விளிம்பில் உள்ளன. அழிந்து வரும் கழுகு இனங்களின் முக்கியத்துவம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செப்டம்பர் மாதம் முதல் சனிக்கிழமை சர்வதேச கழுகுகள் தினமாக உலக நாடுகள் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சர்வதேச கழுகுகள் தின விழிப்புணர்வு வர்ணம் தீட்டும் போட்டி முத்தானந்தபுரம் […]
நாடு முழுவதும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை 15 நாட்கள் தேசிய கண்தான இருவார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. இறந்தவர்களின் கண்களைத் தானமாக வழங்குவதன் மூலம், கருவிழி பாதிப்பால் பார்வையிழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்கச் செய்யவும், கண் தானம் செய்யும் ஒருவர் இறந்து 6 மணி நேரத்திற்குள் விழி வெண்படலத்தை தானமாக வழங்கவும்,ஒருவரின் கண்கள் மூலம் நான்கு பேருக்குப் பார்வை கிடைக்கச் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேசிய கண் தான இரு […]
சுதந்திரப் போராட்ட தியாகி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 155-வது பிறந்தநாள் விழா இன்று செப்டம்பர் 5 கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனாரின் முழு திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டத் திமுக சார்பில், முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், உள்பட […]
கடலூர் மாவட்டம் கோத்தப்பாக்கம் நாத நாயகி நகர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 41). இவர் தனது தந்தை மும்மூர்த்தி, தாய் ருக்குமணி மற்றும் மகள் அமிர்தீஸ்வரி ஆகியோருடன் நேற்று வெள்ளிக்கிழமை திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். காரை ஏழுமலை ஓட்டினார். மதுரை – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள இனாம்மணியாச்சி மேம்பாலம் அருகே வேன் சென்றபோது, எதிர்பாராதவிதமாக வேனின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை […]
கோவில்பட்டி ஜமீன் பேட்டை தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் சமேதவிசாலாட்சி அம்பாள்கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. சுவாமி மற்றும் அம்பாளுக்கு18வகையான சிறப்புஅபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு பூஜைகளை பூமாதேவி கோவில் அர்ச்சகர் செல்வ சுப்பிரமணியன் சுவாமி நடத்தி வைத்தார். கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஏராளமான சிறுவர், சிறுமிகள் ராதை மற்றும் கிருஷ்ணர் வேடமணிந்து வந்து இருந்தனர். அவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். வேடமணிந்து வந்த அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அனைத்து வணிக சங்கங்களின் பேரமைப்பின் […]
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடலோரத் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் சுமார் 7.6 கி.மீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை சுமார் 0.9 கி.மீ உயரத்தில், தமிழகப் பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக, நாளை (செப். 5) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, […]







