சபாநாயகர் முன்பு அமர்ந்து தர்ணா: திமுக எம்.எல்.ஏ.க்களை குண்டுக்கட்டாக வெளியேற்றிய காவலர்கள்
தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியதும், திமுக கொறடா எ.வ.வேலு பேசுகையில், என்னுடைய சட்டமன்ற அனுபத்தில் எத்தனையோ முதல்-அமைச்சர்களை பார்த்துள்ளேன்..! அவர்கள் எல்லாரும் கண்ணியமாக தான் பேசினார்கள். நேற்று 26 நிமிடங்கள் அமைதியாக காத்திருந்தோம். ஆனால், நீதிமன்ற விசாரணையில் இருக்கும் வழக்குகள் குறித்து முதல்-அமைச்சர் பேசியிருக்கிறார். பலமுறை இதே மன்றத்தில் பேசப்பட்ட சர்க்காரிய அறிக்கை குறித்தும் அவதூறாக பேசியிருக்கார். முதல்-அமைச்சர் ஆதாரமில்லாமல் பேசி இருக்கிறார். காவல்துறை மானியம் தொடர்பான தகவல் தவிர்த்து, மிசா, […]







