கோவில்பட்டியில் சந்திர கிரகணம்: டெலஸ்கோப் மூலம் சிவப்பு நிலவை பார்த்து வியந்த பொதுமக்கள்

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.இதனால் பூமியின் நிழல் சந்திரனில் விழுகிறது.இது ஒரு இயற்கையான நிகழ்வு ஆகும்.கிரகணங்கள் நிழல்களின் விளையாட்டு தான். இந்நிகழ்வு மனிதர்கள், விலங்குகள், உணவு பொருள்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது.

அந்த வகையில் நேற்று சந்திரகிரகணம் ஏற்பட்டது,. இதையொட்டி தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் அஸ்ட்ரோ கிளப்புக்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வானவியல் கருத்துக்களை பரப்புரை செய்தனர்,
தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் கோவில்பட்டி கதிரேசன் கோவில் மலையில் அமைக்கப்பட்டு இருந்ந டெலஸ்கோப்பில் ஏராளமான பொதுமக்கள் மாணவர்கள் குழந்தைகள் டெலஸ்கோப் மூலம் சந்திர கிரகணத்தின் போது நடந்த சிவப்பு நிலவை கண்டு வியந்தனர்.

இந்நிகழ்விற்கு தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன் தலைமை தாங்கினார், ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் முத்து செல்வம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி திருநெல்வேலி மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி கலந்துகொண்டு சந்திர கிரகணம் மற்றும் சிவப்பு நிலவு குறித்தும் டெலஸ்கோப் பயன்பாடு குறித்து செயல் விளக்கத்துடன் பேசினார்.







