தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்றன. 5 வயதுக்கு உட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சென்னை பாலவாக்கத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் முகாமை தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெற்றது. அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 […]
79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இடையிலான ஆக்கி போட்டி கள் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் நடந்து வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை 21 6 2026 அன்று முதல் போட்டிகள் நடந்து வருகின்றன லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன .இப் போட்டியில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. […]
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் காலமானார். அவருக்கு வயது 73. உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.. சில ஆண்டுகளுக்கு முன்பு பாக்யராஜ் கண்களை தானம் செய்ய பதிவு செய்து வைத்திருந்ததால் அவரது வீட்டுக்கு கண் மருத்துவமனை குழுவினர் இன்று சென்று […]
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இந்தியா முழுவதும் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களின் சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்ததாவது:- 2026-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர்விருதுக்கு தங்கள் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களும் ஜூலை 10-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டு […]
தெலுங்கானாவின் ஐதராபாத் ஷாமிர்பேட்டையில் தாசில்தாராகவும் இணை பத்திர பதிவாளராகவும் இருப்பவர் தும்மகோமா சுசரிதா. இவர் கடந்த மாதம் 30 ஏக்கர் விளை நிலத்தை, விவசாயம் அல்லாத நிலமாக மாற்ற 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு, அதில் முதற்கட்டமாக 2 லட்சம் ரூபாயை முன்பணமாக பெற்றபோது லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்டார். இதை தொடர்ந்து சுசரிதா, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கிடையேகைதான சுசரிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதன்படி, லஞ்ச ஒழிப்புப் […]
தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக ம.தி.மு.க. அறிவித்துள்ளது. த.வெ.க.வுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தி.மு.க. அணியில் ம.தி.மு.க. இடம் பெற்றுள்ளது .கடந்த 2019-ம் ஆண்டு முதல் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல் வரை தொடர்ச்சியாக தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. போட்டியிட்டது . சமீபத்திய சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க. தலைவர் விஜய், ஆட்சி […]
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கே.பி.தளவாய்புரம் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுடலைமணி அசாம் மாநிலத்தில் வீர மரணம் அடைந்துள்ளார். அவரது உடல் இன்று 27/06/2026 சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்டம், கூட்டுடன்காடு கிராமத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி […]
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். 1953 ஜனவரி 7-ஆம் தேதி ஈரோடு மாவட்டம் வெள்ளகோவிலில் பிறந்த பாக்யராஜ், இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். பின்னர் ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ‘அந்த 7 நாட்கள்’, ‘முந்தானை முடிச்சு’, ‘இன்று போய் நாளை வா’, ‘சின்ன வீடு’, ‘டார்லிங் டார்லிங் […]
79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அளவில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பள்ளி மாணவர்களுக்கான ஆக்கி போட்டி கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக நடைபெற்று வருகிறது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இப்போட்டி நடக்கிறது, அதன்படி இன்று ஜூன் 26 மொகரம் பண்டிகை அரசு விடுமுறை நாளில் போட்டிகள் நடைபெற்றன, காலை 6.30 மணி அளவில் நடைபெற்ற முதல் போட்டியில் நாடார் மேல்நிலைப்பள்ளி ரெட் […]
தூத்துக்குடியில் மானிய கடன்கள் சிறப்பு நேர்காணல் திங்கட்கிழமை நடக்கிறது ; ஆட்சியர் விசு
சர்வதேச குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாளை (MSME DAY) முன்னிட்டு தூத்துக்குடி பைபாஸ் சாலை அருகில் உள்ள மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தில் 29-6-2026 திங்கட்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மானிய கடன்கள் வழங்குதல் தொடர்பான சிறப்பு நேரடி நேர்காணல் மாவட்ட தொழில் மைய மேலாளர் அ.ஸ்வர்ணலதா தலைமையில் நடைபெற உள்ளது,. இச்சிறப்பு நேரடி நேர்காணலில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் […]







