ஓணம் பண்டிகை – கேரள மக்களால் சாதி மத வேறுபாடு இன்றி 10 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பாரம்பரிய திருநாளாகும். மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை கொண்டாடப்படும் திருவிழாவாகும். புராணங்களின் படி மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தனது மக்களை காண பூமிக்கு வரும்போது மன்னரை வரவேற்கும் வகையில் தும்பை,செம்பருத்தி மற்றும் வண்ண மலர்கள், இதழ்களைக் கொண்டு வட்ட வடிவமாக அலங்கரித்து திருவிழாவாக கேரளா மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் […]
இந்தியாவில் மொத்தம் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில், 543 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகளும், குறைவாக மிசோரம், நாகலாந்து, சிக்கிம், அந்தமான் – நிக்கோபார், சத்தீஷ்கர், லடாக், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகியவற்றில் தலா 1 தொகுதிகளும் உள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் இருக்கின்றன. இதேபோல், நாடு முழுவதும் 4,123 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகளும், குறைந்தபட்சமாக புதுச்சேரி மற்றும் சிக்கிமில் தலா 32 தொகுதிகளும் […]
கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளையின் 5 வது ஆண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.. நிகழ்ச்சிக்கு செயற்குழு உறுப்பினர் அசோக் வரவேற்றார். அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் தலைமை தாங்கினார். தலைவர் ஜெயக்கொடி பொருளாளர் கார்த்திகேயன் செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன் பாலமுருகன் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பஜ்ரங் நர்த்தனாலயா நாட்டிய பள்ளி ஆசிரியர்கள் லதா கணபதி ,ஐஸ்வர்யா கணபதி தலைமையில் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. […]
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகே, ஆதனூர் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (50). இவரது மகன் கருப்பசாமி.(21) இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. , நேற்றிரவு வழக்கம் போல மதுபோதையில் வீட்டிற்கு வந்த கருப்பசாமி, தந்தை மாரிமுத்துவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மகனின் தொடர் தொல்லை மற்றும் தகராறால் ஆத்திரமடைந்த மாரிமுத்து, வீட்டில் இருந்த […]
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் அவர்களின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு விஜயகாந்த் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேமுதிக மாவட்ட சமூக வளைதள அணி செயலாளர் சதீஷ் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சிக்குவடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் கொம்பையா பாண்டியன், கோவில்பட்டி நகர செயலாளர் நேதாஜிபாலமுருகன் முன்னிலை வகித்தனார். விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர் தூவி புகழ் […]
கோவில்பட்டியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்: நகராட்சிக்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு கோரிக்கை
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் தோழர் அபிராமி முருகன் தலைமையில் நடைபெற்றது. வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன . *மந்திதோப்பு சாலை விரிவாக்கம் போராட்டம் காரணமாக பேட்ச் ஒர்க் வேலை நடந்துள்ளது. சாலை விரிவாக்கம் குறித்த பணியினை அரசு மட்டத்தில் எடுக்கும் நடவடிக்கை குறித்து அதிகாரிகளை சந்தித்து பேசுவது. *போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். […]
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவிக தெருவைச் சேர்ந்தவர் லெட்சுமணன் என்பவரது மகன் மாரியப்பன் (வயது 21). சுமை தூக்கும் தொழிலாளி. மாரியப்பனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு ஆவணி மாதம் கடைசியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் மாரியப்பன் இன்றுb திங்கட்கிழமை மதியம் திரு.வி.க தெருவில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான வயல் காட்டில் வெட்டி கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவலறிந்த சங்கரன்கோவில் துணை போலீஸ் கண்காணிப்பாளர் செங்கோட்டு வேலவன், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், கிங்ஸ்லி தேவானந்த், சுஜித் […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் இயக்க சீரமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார். கோவில்பட்டி வட்டார தலைவர் ரமேஷ்மூர்த்தி,பொதுக்குழு உறுப்பினர் சாமுவேல் ஞானதுரை,ஐஎன்டியுசி ராஜாசேகரன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பார்வையாளர் பூவை ஜேம்ஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். காங்கிரஸ் நிர்வாகிகள் செல்லதுரை,ஆறுமுகம், போலீஸ் வேணுகோபால், தர்மர், எஸ்சிஎஸ்டி பிரிவு மாநிலத் […]
பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை பரவலாக தற்போது பெய்து வருகிறது. இதன் காரணமாக பருவகால காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தற்போது பன்றி காய்ச்சல் மக்களிடையே அதிக அளவில் பரவி வருகிறது. இது சோதனையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த 8 மாதங்களில் 4 ஆயிரத்து 125 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பில் 50 சதவீதம் பெங்களூருவில் பதிவாகியுள்ளது. அதாவது பெங்களூருவில் மட்டும் 2 ஆயிரத்து 33 […]
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் ரஜினிகாந்தின் வாழ்க்கைப் பயணம், பலருக்கும் உத்வேகத்தை அளிக்கும் ஒன்றாகும். கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகத்தில் பஸ் கண்டக்டராக பணியாற்றிய அவர், தனது விடாமுயற்சி மற்றும் திறமையால் தமிழ் சினிமாவின் “சூப்பர் ஸ்டார்” என்ற உயரத்தை அடைந்தார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்ட சுயசரிதை புத்தகத்தை எழுதி வருவதாக தகவல்கள் வெளியாகியது. சிறுவயது முதல் சினிமாவில் உச்சம் தொட்டது வரை நடந்த முக்கிய சம்பவங்கள், வாழ்க்கைப் […]







