திருநெல்வேலியில் மாரத்தான் போட்டி: கோவில்பட்டி எஸ் எஸ் டி எம் கல்லூரி மாணவர் முதலிடம்
Oplus_16908288
திருநெல்வேலி மாவட்ட தொழிற்சங்கம் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து இன்று 8.8.2026 காலை திருநெல்வேலியில்“போதை இல்லா சுதந்திர நகரம் – விழிப்புணர்வு மாரத்தான்” போட்டியை நடத்தின.

இதில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர். இறுதியில் கோவில்பட்டி எஸ் எஸ் டி எம் கல்லூரி உடற்கல்வித்துறை இரண்டாம் ஆண்டு மாணவர் துரைராஜ் அவர்கள் கலந்து கொண்டு முதல் இடத்தைப் (I Position) பிடித்து வெற்றி பெற்றார்.
அவருக்கு தொடர் கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன மேலும் இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

சிறப்பான சாதனை புரிந்துள்ள மாணவர் துரைராஜுக்கு கல்லூரியின் செயலாளர் கண்ணன், முதல்வர் செல்வராஜ், உடற்கல்வித்துறை தலைவர் செல்லத்துரை, உடற்கல்வி இயக்குனர் ஜெயா சிவா மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.







