மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி மற்றும் வளாக நேர்காணல்: கோவில்பட்டி ஜி வி என் கல்லூரி- கைரா டெக்னாலஜிஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
Oplus_16908288
கோவில்பட்டி ஜி.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி)யின் வணிக நிர்வாகத் துறைமற்றும் கோவில்பட்டி கைரா டெக்னாலஜிஸ் (டிஜிட்டல் மார்க்கெகெட்டிங் )நிறுவனம் நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது
கைரா நிறுவனத்தின் தேவைகளின் அடிப்படையில் மக்கள் மேலாண்மை, சந்தைப்படுத்தல் மற்றும் மனிதவள பணிகளில் மாணவர்களை தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பிற்கு பரிசீலித்தல், வளாக நேர்காணல் நிகழ்வுகளில் பங்கேற்றல் தொடர்பான இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரியின் சுயநிதிப்பாடப்பிரிவுகளின் இயக்குநர் முனைவர் பா. மகேஷ் குமார் தலைமை தாங்கி பேசினார்
தலைமையுரையாற்றினார். துறையின் தலைவர் ச. சிவசங்கர் வாழ்த்துரை வழங்கினார்கள். கைரா டெக்னலாஜிஸ் நிறுவனர் செல்வலட்சுமி சிவந்தி ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட்டார்.
மேலும் திட்டமிடுதல், சரியான முடிவெடுத்தல், தன்னை உணர்தல், போன்ற தலைப்புகளில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தார்.
மாணவர்கள் ரத்ததானம்

ஜிவிஎன் கல்லூரி நிறுவனர் நாள்” விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லுாரிச் செயலர் ப.மகேந்திரன் அவர்கள் தலைமையில் வேதியியல் துறைத்தலைவர் மற்றும் பொறுப்பு முதல்வர் பா.உமாதேவி சுயநிதி பாடப்பிரிவுகளின் இயக்குநர் பா.மகேஸ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கோவில்பட்டி, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் துளசி லட்சுமி, வேலுபிரகாஷ், யஷ்வந்த்குமார். ஜேவியர், ஆய்வக நுட்பனர், இளையரசனேந்தல், ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார ஆய்வாளர் .பாலசுப்பிரமணியன் மற்றும் குழுவினர் இம்முகாமில் பங்குபெற்று மாணவ, மாணவியர்களிடம் ரத்தம் தானமாக பெற்றனர். முகாமில் 55 மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களிடமிருந்து ரத்தம் பெறப்பட்டது.

இம்முகாமிற்கான ஏற்பாடுகளை உடல் நலக்கழக ஒருங்கிணைப்பாளர் ச.செல்வக்குமார், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் .எம்.மாரிச்சாமி கி.ரேணுகாதேவி, இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் கு.மாரியப்பன் ஜெயகுரும்பன் ஆகியோர் செய்திருந்தனர்.







