விஜய் 52வது பிறந்த நாளை முன்னிட்டு தொண்டர்கள் ரத்த தானம்
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மாவட்ட இளம்பெண்கள் பாசறை அமைப்பாளர் அன்னலட்சுமி சுந்தர் ஏற்பாட்டில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் 52வது பிறந்த தினத்தை முன்னிட்டு ரத்ததானம், கண் தானம், அன்னதானம் நடைபெற்றது.

இம்முகாமில் மாவட்ட இளம் பெண்கள் பாசறை அமைப்பாளர் அன்னலட்சுமி சுந்தர் மாவட்ட பொருளாளர் செல்வின் சுந்தர் தனது கண்களை தானம் செய்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். காளிதாஸ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில்இளைஞர் அணி அமைப்பாளர் சுமங்கலி ராஜா மகளிர் அணி அமைப்பாளர் செல்வி ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி பிரசாத் கண்ணன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சித்ரா, ஜான்சி,கூடலிங்கம், வர்த்தக அணி அமைப்பாளர் தங்கமணி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அமைப்பாளர் சங்கரன் ஐயா, கொள்கை பரப்பு அணியின் அமைப்பாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.








