தூத்துக்குடியில் வடமாநில தொழிலாளி கொலையில் 4 பேர் கைது
தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளையும், சம்பவம் நடந்த 5 மணி நேரத்திற்குள்ளாகவே தூத்துக்குடி மாவட்டக் காவல் துறையினர் பிடித்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் சிங் (40) என்பவர், தூத்துக்குடி, ‘பிரேமா மெஸ்’ (அருகே தலையில் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவல் கிடைத்ததும், தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையின்போது, இறந்து போனவருக்கும் சிலருக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் போது மரக்கட்டையால் தாக்கப்பட்டதால் அவர் உயிரிழந்ததும்என்பதும் தெரியவந்தது.

இதன் அடிப்படையில், தூத்துக்குடியைச் சேர்ந்த சிவா (23), ஜேம்ஸ் (25), பூமிநாதன் (24) மற்றும் காசாலி (26) ஆகிய 4 பேரையும் சம்பவம் நடந்த 5 மணி நேரத்திற்குள்ளாகவே போலீசார் தேடி கண்டுபிடித்து கைது செய்தனர்,. அவர்கள் மீது மேல் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.







