வேட்டை நாய் வைத்துக்கொள்ள அனுமதி கோரி சாலை மறியல்: தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் 100 பேர் கைது
கோவில்பட்டி பயணியர் விடுதி அருகே தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் மாநில தலைவர் ஓ.எ.நாராயணசாமி தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாநில பொருளாளர் சுப்புராஜ் மாவட்ட தலைவர்கள் நடராஜன் வெள்ளத்துரை பாண்டி செங்கோட்டை வேலுச்சாமி அவைத்தலைவர் வெங்கடசாமி தென்காசி மாவட்ட தலைவர் தாமோதரன் கோவில்பட்டி வட்டாரத் தலைவர் வெங்கடாசலபதி மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்
அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் வருமாறு,:-
*2024ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும்,

*விவசாய நிலங்கள் மற்றும் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த மற்றும் விரட்டி அடிப்பதற்கு விவசாயிகள் வேட்டை நாய் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்,
*இந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தினால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வளர்ச்சி நிவாரணமாக ஒரு ஏக்கருக்கு ரூபாய் 20000 வழங்க வேண்டும்,

*தூத்துக்குடி மாவட்டத்திற்கு மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகை 56 கோடி ரூபாய் நிதியை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்







