புதிய ரேஷன்கார்டுகள் வழங்க லஞ்சம் கேட்பதாக மூவேந்தர் மருதம் முன்னேற்றம் கழகம் புகார் மனு
கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேஷன்கார்டுகள் வழங்க லஞ்சம் கேட்பதாக கூறி மூவேந்தர் மருதம் முன்னேற்றம் கழகம் சார்பில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் அன்புராஜ் தலைமையில், மாநில பொறுப்பாளர் பொன்னுச்சாமி, மாவட்ட செயலாளர் பேச்சிமுத்து, தென்மண்டல மகளிர் அணிச் செயலாளர் சுப்புலட்சுமி, மாநில இளைஞரணி செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கோவில்பட்டியில் ரேஷன்கார்டுகள் வழங்குவதற்கு லஞ்சம் கேட்பதாக கூறி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மணிகண்டனிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், கூறி இருந்ததாதாவது:-
கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்ட வழங்கல் பிரிவில் பணியாற்றும் வருவாய் ஆய்வாளர் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்க வரும் பொதுமக்களிடம் லஞ்சம் கேட்கிறார். லஞ்சம் கொடுக்காத பொது மக்களுக்கு ரேஷன் கார்டுகளை வழங்காமல் காலதாமதப்படுத்துகிறார்.

அலுவலகத்திலேயே இடைத்தரகர்களை வைத்துக்கொண்டு, பணத்தை கொடுக்கும் மக்களுக்கு உடனே புதிய ரேஷன் கார்டு கிடைத்து விடுகிறது. பணம் கொடுக்காதவர்களுக்கு பல மாதங்களாகியும் ரேஷன் கார்டுகள் கிடைப்பதில்லை.
எனவே, வட்ட வழங்கல் பிரிவில் வருவாய் ஆய்வாளரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.







