கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதிரி நேர்காணல்; தூத்துக்குடியில் 21 ம் தேதி நடக்கிறது
Oplus_16908288
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெளியான செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர், இளநிலை உதவியாளர் ஆகிய பணிகளுக்கான எழுத்து தேர்வுகள் கடந்த அக்டோபர் மாதம் நடத்தி முடிக்கப்பட்டது.

மாவட்ட அளவில் நடத்தப்படும் நேர்முகத்தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான கட்டணமில்லா மாதிரி நேர்முகத் தேர்வு (Mock Interview) தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற வெள்ளிக்கிழமை 21.11.25 காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த மாதிரி நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பமுள்ள எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் மட்டும் கீழே கொடுக்கப் பட்டுள்ள Google படிவத்தை பூர்த்தி செய்து Submit செய்ய வேண்டும்.
https://forms.gle/FUdAkSHfHiBkzz168

இந்த மாதிரி நேர்காணலில் நேர்முகத் தேர்வை சிறப்பாக எதிர்கொள்வதற்கான ஆலோசனைகள் துறை சார்ந்த வல்லுனர்களால் வழங்கப்படும்.
இந்த மாதிரி நேர்காணலில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் தங்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, நேர்காணல் அழைப்பு கடித நகல் ஆகியவற்றை எடுத்து வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது







