தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Oplus_16908288
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்டச்செயலாளர் சுரேஷ் தலைமையில் கோவில்பட்டயில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் டிசம்பர் 28 ல் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் அவரது நினைவாலயத்தில் குருபூஜையில் கலந்து கொள்வது மற்றும் ஜனவரி 9 ம் தேதி கடலூரில் நடைபெறும் மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் நமது மாவட்டம் சார்பில் பெருந்திரளாக கலந்து கொள்ளவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பூத்கமிட்டி அமைத்து பாகமுகவர்கள் கூட்டம் நடத்துவது மற்றும் நமது கழக நிர்வாகிகள் அனைவரும் வாக்காளர் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு வாக்காளர் படிவத்தை பூர்த்தி செய்து தர உதவவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் தேமுதிக மாவட்ட அவைத்தலைவர் கொம்பையா பாண்டியன்,செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர், கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளர் காளிதாஸ், ஒன்றிய செயலாளர்கள் கோவில்பட்டி பொன்ராஜ், பெருமாள்சாமி, விளாத்திகுளம் தொகுதி பொறுப்பாளர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி,மேற்கு மாரியப்பன்,புதூர் கிழக்கு ஆறுமுகபெருமாள், கோவில்பட்டி நகரச்செயலாளர் நேதாஜி பாலமுருகன், கயத்தார் நகரச்செயலாளர் கண்ணண், ஒன்றியசெயலாளர் அருண்,மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் முத்துமாலை, துணைசெயலாளர் குவாளிஸ் ராஜ், இளைஞரணி துணைசெயலாளர் லட்சுமணன்,சமுக வளைதள அணி சிவமுருகன்,ராமராஜ், மதிமுத்து,முத்துபாண்டி, பொன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்







