கோவில்பட்டியில் 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் ஆக்கி: ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் அணி முதலிடம் பெற்றது

உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டியை கொண்டாடும் விதமாக கோவில்பட்டியில் ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் நடத்தும் மாவட்ட அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆக்கி போட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.இப்போட்டியில் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
இன்று காலை நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் 7-0 என்று கோல் கணக்கில் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியை தோற்கடித்தது.

இன்னொரு அரை இறுதிப் போட்டியில் கோவில்பட்டி ஆக்கி அகாடமி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் டாக்டர் அம்பேத்கர் ஆக்கி அணியை வீழ்த்தியது
மாலை 3 மணி அளவில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் டாக்டர் அம்பேத்கர் ஆக்கி அணி 3-1 என்ற கோல் கணக்கில் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியை வென்றது.
மாலை 4 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் 5 – 3 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி ஆக்கி அகாடமி அணியை வீழ்த்தி முதலிடம் பெற்றது.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு வெற்றி பெற்ற முதல் நான்கு அணியினருக்கு ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம், கோவில்பட்டி ஆக்கி அk6மி, டாக்டர் அம்பேத்கர் ஆக்கி அணி, காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியினருக்கு முறையாக கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினர்.
ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி, பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா, வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி துணை தலைமை ஆசிரியர் அந்தோணி, முன்னாள் இந்திய ஆக்கி வீரர் அஸ்வின், தொழிலதிபர்கள் உமாசங்கரி பொன் மகராஜா ,ராஜசேகர், வினோத் , மூத்த ஆ க்கி வீரர்கள் காளிதாஸ், புகழேந்தி மணிவண்ணன், மனோஜ் குமார், உடற் கல்வி ஆசிரியர்கள் முருகன் சுரேஷ்குமார் கிருஷ்ணமூர்த்தி சுரேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நடுவர்களாக பூபேஷ், கௌதமன், பிரேம்குமார், அருண், மாதவன், அருண்குமார், சண்முகப்பிரியா, அர்ச்சனா, ஆகியோர் செயல்பட்டனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை ராஜீவ் காந்தி விளையாட்டு கழக துணைச் செயலாளர் வேல்முருகன், முகேஷ் குமார், ஜெகதீஷ் , ஆகியோர் செய்திருந்தனர் இறுதியில் வேல்முருகன் நன்றி கூறினார்







