திருப்பூரில் திருமண விழாவில் பழங்காலத்து மரபுப்படி பனியன் அணிந்தபடி மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்
தமிழகத்தின் “டாலர் சிட்டி” என்று அழைக்கப்படும் நகரம் திருப்பூர். உலக நாடுகள் தங்களது ஆடை உற்பத்திக்கு முதலில் தேர்வு செய்யும் நகரமாக திருப்பூர் விளங்குகிறது.
பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தொழிலில் இந்த நகரம் மிகவும் சிறந்து விளங்குகிறது. சமீபத்தில் நடந்த ஆய்வில் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பட்டியலில் ஆறாவது இடத்தைப் திருப்பூர் பெற்றுள்ளது.

திருப்பூரில் நடைபெறும் பெரும்பாலான திருமண நிகழ்வுகளில் உள்ளாடைகள் தயாரிப்பு தொழிலுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் மணமகன் மணமேடையில் வேட்டியுடன் பனியன் மட்டும் அணிந்தபடி மணமகளுக்கு தாலி கட்ட வேண்டும் என்ற மரபு கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி இன்று காலை திருப்பூரில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகன் வேட்டி மற்றும் பனியன் அணிந்து பங்கேற்று மணமகளுக்கு தாலி கட்டினார்.
இந்த காட்சியை கோவில்பட்டியை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கோபி கிருஷ்ணா பதிவு செய்து tn96news வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டு உள்ளார்.







