கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 7ம் நாள் மண்டகப்படி
கோவில்பட்டி பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா நடந்து வருகிறது.
விழாவின் 7ம் நாள் மண்டகப்படி நேற்று சைவ வேளாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது.

இதை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது தொடர்ந்து, அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.
ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா 7ம் நாள் மண்டகப்படி சைவ வேளாளர்கள் சங்கம் தலைவர் தெய்வேந்திரன், செயலாளர் நடராஜன், பொருளாளர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் முத்துகிருஷ்ணன், துணைச் செயலாளர் பிரபு, தணிக்கையாளர் சுந்தரம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், சிறப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.







