சாலை பணியாளர்கள் சங்கத்தினர், கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி வளாகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் கண்களில் கருப்பு துணி கட்டி, கையில் நியாய தராசுவுடன் ஆர் ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு :-

*சாலைப் பணியாளர்களின் 41-மாத பணிநீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் *சென்னை உயர்நீதிமன்ற மேல் முறையீட்டினை திரும்ப பெற வேண்டும்,
*மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க வேண்டும்,

- நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை அரசே ஏற்று நடத்த வேண்டும்,
- *கருணை அடிப்படை பணி நியமனம் கேட்டு விண்ணப்பம் செய்து இருக்கும் காத்திருக்கும் சாலைப் பணியாளர் குடும்பத்தினருக்கு விரைந்து பணி வழங்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்







