கோவில்பட்டியில் ‘பேர்ட்ஸ்’ தொண்டு நிறுவன விழா
கோவில்பட்டியில் பேர்ட்ஸ் தொண்டு நிறுவனம் சார்பாக நேரு பிறந்தநாள் ,
ஆசிரியர் தினம்,உள்ளாட்சி தினம் என முப்பெரும் விழா காந்தி மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு நிறுவனத்தலைவர் திருமலை முத்துசாமி தலைமை தாங்கி,விருது வழங்கி,
சிறப்புரையாற்றினார்.
வழக்கறிஞர் கர்ணன்,பேராசிரியர் மாரியப்பன்,இலக்கிய ஆர்வலர்கள் சுப்புலட்சுமி திரிபுரநாதன், நாகரத்தினம், ஹேச்எம்எஸ் இணைச்செயலாளர் வினோபா, பிரம்மா குமாரிகள் அமைப்பு பொறுப்பாளர்கள் பிரம்மாகுமார், பாலசுந்தரம், வில்லிசைக்கலைஞர் மாரியப்பன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ரவீந்திரன், ஆசிரியர் சண்முகக்கனி, வரகனூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி, துணைத் தலைவர் இந்துஜா, குருவிகுளம் ஒன்றிய கவுன்சிலர் சுகுணா கனகராஜ், கவுன்சிலர் ராஜேஸ்வரி கந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். குழந்தைகளின் மாறுவேடம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பேர்ட்ஸ் தொண்டு நிறுவனம் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் நன்றி உரையாற்றினார்.







