திருச்சியில் பள்ளிகள் இடையிலான மாநில ஆக்கி: தூத்துக்குடி மண்டல அணி வீரர்கள் தேர்வு
Oplus_16908288
தமிழ்நாடு பள்ளி ஆக்கி லீக் போட்டி திருச்சியில் 12 -ந்தேதி முதல் 16ஆம் தேதி வரை அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது..
இப்போட்டியில் 12 அணிகள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன தூத்துக்குடி மண்டல ஒருங்கிணைந்த ஆக்கி அணியின் பயிற்சி முகாம் கடந்த நான்கு நாட்களாக கோவில்பட்டி செயற்கை புல் ஆக்கி மைதானத்தில் நடைபெற்றது இப்பயிற்சி முகாமில் 25 மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

இவர்களில் 18 வீரர்கள் கொண்ட தூத்துக்குடி மண்டல ஒருங்கிணைந்த ஆக்கி அணி இன்று காலை அறிவிக்கப்பட்டது பயிற்சியாளர் முன்னாள் இந்திய ஆக்கி வீரர் அஸ்வின். அணி மேலாளர் சுரேஷ்குமார் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி, பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா ஆகியோர் தேர்வு செய்தனர்.
தேர்வு பெற்ற வீரர்கள் வருமாறு கோல்கீப்பர்: ஈஸ்வர், பாலசங்கர் தடுப்பு ஆட்டக்காரர்கள் : தர்ஷன் கார்த்திக், அறிவழகன், ரமணன், நிஷாந்த், பிரகதீஷ், தினேஷ் பாபு, இசக்கி முத்து , சந்தோஷ் குமார் , ஹரிஷ்,

முன்கள ஆட்டக்காரர்கள்: மனோஜ் குமார், பாண்டிமாணிக்கம், சந்தோஷ், தக்சன், சின்னராஜ், பிரனேஷ், அவினாஷ்
தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களை உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, திருச்செல்வம், சுரேஷ்குமார், முருகன், வேல்முருகன் பாலசிங், முகேஸ்வரி, மற்றும் மூத்த வீரர்கள் செல்வராஜ், புகழேந்தி , தனசேகர், பொன்ராஜ், ஆகியோர் வாழ்த்து கூறி வழியனுப்பி வைத்தனர்.







