• June 6, 2025

கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி: செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணி காலிறுதிக்கு தகுதி

 கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி: செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணி காலிறுதிக்கு தகுதி

கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 23ம் தேதி நடைபெற்று வருகின்றது.

போட்டியின் 6ம் நாளான இன்று 28ம் தேதி காலை 7. மணி அளவில் நடைபெற்ற 21வது லீக் போட்டியில் சென்னை இன்டர்க்ரல் கோச் பேக்டரி அணியும், சென்னை இந்தியன் வங்கி அணியும் மோதின.

இப்போட்டியில் சென்னை இன்டர்க்ரல் கோச் பேக்டரி  வீரர் சூரிய பிரகாஷ் 8வது  மற்றும் 42வது நிமிடத்தில் பீல்டு கோல் மூலம்  மொத்தம் 2 கோல்கள் அடித்தார்.

எதிர் அணியினரால் கோல் எதுவும்  போடமுடியாத நிலையில் 2:2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.சென்னை இந்தியன் வங்கி அணி வீரர் சோமண்ணா 30வது நிமிடத்தில் (பெனால்டி கார்னர்) மற்றும் ஆனந்த் 50வது நிமிடத்தில் (பெனால்டி ஸ்டோக்) தலா ஒரு  கோல் அடித்து மொத்தம் 2 கோல்கள் அடித்தனர்.

பாலாஜி குமார் மற்றும் ராஜிவ் ரத்தன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது சென்னை இன்டர்க்ரல் கோச் பேக்டரி வீரர் சூரிய பிரகாஷ்-க்கு வழங்கப்பட்டது.

மாலை 5 மணியளவில் நடைபெற்ற 22வது லீக் போட்டியில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணியும், பெங்களூரு ஹாக்கி கர்நாடகா அணியும் மோதின.

இப்போட்டியில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் இரயில்வே அணி வீரர் ஐயப்பா  22வது  மற்றும் 52வது நிமிடத்தில் (பீல்டு கோல்) மற்றும் ராஜு பால் 32வது நிமிடத்தில் (பீல்டு கோல்) மூலம் மொத்தம் 3 கோல்கள் அடித்தனர்.

.பெங்களூரு ஹாக்கி கர்நாடகா அணி வீரர் ராகுல் 24வது நிமிடத்தில் (பீல்டு கோல்) மற்றும் ஆர்யன் உத்தப்பா 35வது நிமிடத்தில் (பீல்டு கோல்) தலா ஒரு  கோல் அடித்து மொத்தம் 2 கோல்கள் அடித்தனர்.

இறுதியில்  3:2 என்ற கோல் கணக்கில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணி வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

சுரேஷ் குமார் மற்றும் அஸ்லாம் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணி வீரர் ஐயப்பாவுக்கு வழங்கப்பட்டது.

முதல் காலிறுதி போட்டி

 29.05.2025 அன்று காலை 7. மணிக்கு நடைபெறும் முதல் காலிறுதி போட்டியில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும் மும்பை யூனியன் வங்கி அணி அணியும் மோதுகின்றன.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *