மத கலவரத்தை தூண்டும் பேச்சு: மதுரை ஆதீனம் மீது கோவில்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார்
மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த பரமாச்சாரியார் சென்னையில் நடந்த சைவ சித்தாந்த மாநாட்டில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதை கண்டித்து கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாட்டில் மத கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் பேசிய மதுரை ஆதீனம் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க. தமிழரசன்,நிர்வாகி நல்லையா, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார் , நகர செயலாளர் மகாராஜன், ஐ.என்.டி.யு.சி. ராஜசேகர், இரட்டைமலை சீனிவாசனார் இயக்க செல்வகுமார்,மனித நேய மக்கள் கட்சி செண்பகராஜ், பகத்சிங் ரத்ததான கழகம் காளிதாஸ், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், மக்கள் நல அறக்கட்டளை மாரிமுத்து குமார், ஜெகன் ஆகியோர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.








