பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா போராடி வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. மெல்போர்னில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அதிகபட்சமாக முகமது ரிஷ்வான் 44 ரன்களும் இறுதியில் நசீம் ஷா 40 ரன்களும், பாபர் அசாம் 32 ரன்களிலும் ஆட்டம் இழக்க பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 203 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.
இதை அடுத்து 204 ரன்கள் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் மேத்தீவ் ஷாட் ஒரு ரன்னிலும், ஜெக் பிரேசர் 16 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 28 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது.
இதனையடுத்து 3-வது விக்கெட்டுக்கு ஸ்மித், ஜாஸ் இங்கிலீஷ் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஸ்மித் 44 ரன்களிலும், ஜோஸ் இங்கிலீஷ் 49 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். மார்னெஸ் லாபஸ்சேன் 16 ரன்களிலும், ஆரோன் ஹார்டி 10 ரன்களிலும் மேக்ஸ்வெல் டக் அவுட்டாகியும் வெளியேற ஆஸ்திரேலிய அணி தோல்வியை நோக்கி சென்றது. எனினும் கேப்டன் பேட் கம்மின்ஸ், தனியாளாக நின்று அபாரமாக விளையாடி 31 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார்.
இதனால், ஆஸ்திரேலிய அணி 33.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் பவுலர்கள் ஹரிஷ் ரவுப் 3 விக்கெட்டுகளும்,ஷாகின் சா அப்ரிடி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
