• June 7, 2025

அமரன் திரைப்படத்திற்கு பாராட்டு: அண்ணாமலைக்கு கமல்ஹாசன் நன்றி

 அமரன் திரைப்படத்திற்கு பாராட்டு: அண்ணாமலைக்கு கமல்ஹாசன் நன்றி

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎப்ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. அமரன் திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ.42.3 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 4 நாட்கள் படத்தின் ஒட்டுமொத்த வசூல் 150 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘அமரன்’ திரைப்படத்தை லண்டனில் பார்த்துவிட்டு பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த அற்புதமான படத்தை கொடுத்த அமரன் படக்குழுவுக்கு வாழ்த்துகள் என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே அண்ணாமலையின் இந்த பதிவுக்கு தயாரிப்பாளர் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் வலை தளத்தில், தமிழக பாஜக தலைவர் தம்பி அண்ணாமலை, அமரன் திரைப்படம் அவருக்கு ஏற்படுத்திய உணர்வலைகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவருக்கு என் நன்றி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அமரன் திரைப்படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *