ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்

வருகிற 31-ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை தீபாவளி பரிசாக உயர்த்தி அறிவித்தது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு 3% வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3% வரை அகவிலைப்படி உயர்த்தி அறிவித்தார்.
இதை தொடர்ந்து நேற்றைய தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக அறிவிக்கப்பட்டது. அதன்படி 20% வரை போனஸ் அறிவிக்கப்பட்டது. ஒரு ஊழியருக்கு அதிகபட்சமாக 16,500 வரை போனஸ் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது ரேஷன் கடை ஊழியர்களுக்கும் தமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது. அதன்படி நியாய விலை கடை பணியாளர்களுக்கும் 20% வரை போனஸ் வழங்கப்பட உள்ளது. ஒரு ஊழியருக்கு அதிகபட்சமாக தீபாவளி போனஸ் ஆக 7,000 ரூபாய் வரையில் கிடைக்கும். மேலும் இந்த வாரத்திற்குள் தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
