• June 8, 2025

சர்வதேச பெண்கள் கிரிக்கெட்: மிதாலி ராஜின் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீராங்கனை

 சர்வதேச பெண்கள் கிரிக்கெட்: மிதாலி ராஜின் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீராங்கனை

9-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 3-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் நியூசிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதன்மூலம் 32 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஆடியதன் மூலம் நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ், இந்திய முன்னாள் வீராங்கனையான மிதாலி ராஜின் வாழ்நாள் சாதனையை முறியடித்துள்ளார்.

அதாவது, பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் ஆடிய (டெஸ்ட் + ஒருநாள் + டி20) வீராங்கனை என்ற பட்டியலில் மிதாலி ராஜை (333 ஆட்டம்), முந்தி சுசி பேட்ஸ் (334 ஆட்டம்) முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் ஆடிய வீராங்கனைகள் பட்டியல்: சுசி பேட்ஸ் (நியூசிலாந்து) – 334 ஆட்டம்.,மிதாலி ராஜ் (இந்தியா) – 333 ஆட்டம்.,எலிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா) – 322 ஆட்டம்., ஹர்மன்ப்ரீத் கவுர் (இந்தியா) – 316 ஆட்டம்., சார்லோட் எட்வர்ட்ஸ் (இங்கிலாந்து) – 309 ஆட்டம்..

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *