தமிழக அரசு துறையில் 3.5 லட்சம் காலி பணியிடங்கள்; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ராயபுரம் தொகுதி திரு வி. க நகர் தொகுதி அதிமுக தொண்டர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டையை முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் வழங்கினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :-
மத்திய அரசுக்கு சொம்பு தூக்கும் கட்சியாக திமுக மாறிவிட்டது. கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியிட்டு விழா, இரு குடும்பங்களின் நிகழ்ச்சிபோல் நடந்ததது. நாணைய வெளியீட்டு விழாவுக்கு பாஜகவை அழைத்து உள்ளதை பார்க்கும் பொழுது ஸ்டாலினின் தலைவராக மோடி மாறியுள்ளாரோ என்று என்ன தோன்றுகிறது.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு முதல் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் விற்பனை கடுமையாக உயர்ந்து உள்ளதால் ஒட்டுமொத்த தொழில்துறையும் தமிழகத்தில் முடங்கிப் போய் உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதலீட்டாளர் மாநாடு நடத்துவதாக கூறியும் அதில் 8 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு பெற்றதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
அந்த மாநாட்டின் மூலம் எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்தானது எத்தனை ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றனர் என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன்? தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 65 லட்சம் பேர் வேலை வாய்ப்பு இல்லாமலும் 55,000 காலிப்பணியிடங்கள் மின்சார துறையில் நிரப்பப்படாமல் இருக்கிறது.
தமிழக அரசு துறையில் மட்டும் 3.5 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளபோது யார் எந்த வேலை வாய்ப்பை முதலீட்டாளர் மாநாடு மூலம் பெற்றனர்.
தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு டாஸ்மாக் மூலம் வருமானத்தை பெருக்கிக் கொண்டே வரும் தமிழக அரசு, தற்போது மனமகிழ் மன்றங்கள்
என்ற பெயரில் 1500 தனியார் பாருக்கு அனுமதி அளித்தது ஏன்?
தமிழகத்தில் பல இடங்களில் வக்பு வாரிய சொத்துக்கள் முறைகேடாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 2000 கோடி ரூபாய் அளவுக்கு பணம் கைமாற்றப்பட்டு இருக்கிறது. இதற்கு துறை அமைச்சராக இருக்கக்கூடிய செஞ்சி மஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக பத்திரிகைகளில் ஆதாரங்களுடன் செய்திகள் வெளி வந்திருப்பதற்கு உரிய பதிலை தமிழக அரசு அளிக்க வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்
\







