அகில இந்திய ஆக்கி: டெல்லியை வீழ்த்திய கோவில்பட்டி அணி

கோவில்பட்டியில் நடந்து வரும் அகில இந்திய ஆக்கிப்போட்டியின்
நான்காம் நாளான நேற்று மாலை 5.15 மணியளவில் நடைபெற்ற 14வது லீக் போட்டியில் சென்னை, அக்கவுண்டண்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணியும் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும் மோதின.
இதில் 3:1 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி வெற்றி பெற்றது.
பிரியாஸ் கவுடா, முனவர் பாஷா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வீரர் தல்விந்தர் சிங்க்கு வழங்கப்பட்டது.
மாலை 6.45 மணியளவில் நடைபெற்ற 15வது லீக் போட்டியில் சென்னை, இன்டக்ரல் கோச் பேக்டரி அணியும் பெங்களூரு கனரா பேங்க் அணியும் மோதின.
இதில் 6:2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு கனரா பேங்க் அணி வெற்றிப் பெற்றது.
அஸ்வனி குமார், பாலாஜி குமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது பெங்களூரு, கனரா பேங்க் வீரர் நிக்கின் திம்மையாவுக்கு வழங்கப்பட்டது.
இரவு 8.15 மணியளவில் நடைபெற்ற 16வது லீக் போட்டியில் கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணியும் நியூ டெல்லி, சென்ட்ரல் செக்ரிட்டேட் அணியும் மோதின.

ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் கோவில்பட்டி, அணி வீரர் நவீன் ராஜாகுமார் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
19-வது நிமிடத்தில் கோவில்பட்டி, அணி வீரர் நவீன் ராஜாகுமார் பீல்டு கோல் முறையில் மீண்டும் ஒரு கோல் போட்டார்.
48-வது நிமிடத்தில் நியூ டெல்லி, அணி வீரர் கோவிந்த் சிங் ராவத் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.
57-வது நிமிடத்தில் கோவில்பட்டி, அணி வீரர் மனோஜ் குமார் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
60-வது நிமிடத்தில் நியூ டெல்லி, அணி வீரர் வினய் ராணா பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். இறுதியில் 3-2 என்ற கோல்கணக்கில் நியூடெல்லி அணியை கோவில்பட்டி அணி வீழ்த்தியது.
முனவர் பாஷா,சுரேஷ் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.சிறந்த ஆட்டக்காரர் விருது கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் வீரர் மனோஜ் குமாருக்கு வழங்கப்பட்டது.
இன்றைய போட்டிகள்
இன்று 28.5.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெறும் போட்டிகளின் விபரம்:
காலை 7 மணியளவில் நடைபெறும் 17வது லீக் போட்டியில் போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணியும் ஒடிஷா, டாடா நாவல் ஹாக்கி அகாடமி அணியும் மோதுகின்றன.
மாலை 5.15 மணியளவில் நடைபெறும் 18வது லீக் போட்டியில் சென்னை, இன்கம் டேக்ஸ் அணியும் மும்பை, யூனியன் பேங்க் அணியும்
