கோவில்பட்டியில் தொழில் முனைவோர் கலந்துரையாடல் கூட்டம்; 18-ந் தேதி நடக்கிறது
கோவில்பட்டி ஜே.சி.ஐ அமைப்பின் துணை அமைப்பான ஜே.காம்., வர்த்தக இணைப்புக்கான ஒரு அங்கமாக திகழ்கிறது. வருகிற 18-ந்தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கோவில்பட்டி ஜே.சி.பவன் கட்டிடத்தில் தொழில் முனைவோர் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்துகிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்பட்டி தொழில் முனைவோர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி ஜே.சி.ஐ.தலைவர் டி.தீபன்ராஜ், நேரில் ஒவ்வொருவரையும் சந்தித்து அழைப்பு விடுத்து இருக்கிறார்.
18-ந்தேதி நடக்கும் கல்ந்துரையாடல் கூட்டத்தில் ஜே.சி.ஐ.18-வது மண்டல தலைவர் என்.கார்த்திக், மண்டல ஜே.காம்.சேர்மன் எல்.ராதாகிருஷ்ணன், தலைமை பயிற்சியாளர் எம்.அருண்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.
மேலும் கூட்டத்தில் பங்கேற்கும் தொழில் முனைவோர் தங்கள் நிறுவனம் பற்றி விளக்கி பேசுவார்கள். இது மற்றவர்களுக்கு பயன் அளிக்கும் விதமாக இருக்கும். இதன்மூலம் வர்த்தகம் பெருகும் வாய்ப்பு அதிகம் ஏற்படும்.
கோவில்பட்டி ஜே.சி.ஐ.தலைவர் டி.தீபன்ராஜ், செயலாளர் ஆர்.சூர்யா ஆகியோர் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்..