வளைகுடா பிராந்தியத்தில் நடந்து வரும் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது, சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில், பெட்ரோல், டீசலுக்கும் அந்த நிலை வரலாம் என்ற பதற்றம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது, ஆனால் இந்த விவகாரத்தில் எந்தவித பதற்றமும் வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகம் “ ‘அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் போதுமான கச்சா எண்ணெயுடன் இயங்கி வருகின்றன. […]
விஜய் நடித்த படங்களை தியேட்டர்கள், தொலைக்காட்சிகளில் திரையிடக்கூடாது; தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கடிதம்
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தமிழக வெற்றிக்கழகம் கட்சி இந்த தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுகிறது, அக்கட்சியின் தலைவர் விஜய் நடிகருமானவர் என்பதால், அவரது ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்சார் பிரச்சினையில் சிக்கிய ஜனநாயகன் படம் தற்போது தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை […]
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள்,அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன இன்று ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா 1.மயிலாப்பூர் 2.தளி 3.மொடக்குறிச்சி 4..உதகமண்டலம் 5..அவினாசி 6.திருப்பூர் தெற்கு 7.கோவை வடக்கு 8.கந்தர்வக்கோட்டை பு9.துக்கோட்டை 10.திருப்பத்தூர் 11.மதுரை தெற்கு 12.சாத்தூர் 13.திருச்செந்தூர் 14.வாசுதேவநல்லூர் 15.ராதாபுரம் 16.நாகர்கோவில் 17.விளவங்கோடு 18.ஆவடி 19திருவண்ணாமலை 20.தஞ்சாவூர் 21.திருவாரூர் 22.அறந்தாங்கி 23.மானாமதுரை 24.ராமநாதபுரம் 25.குளச்சல் 26.பத்மநாபபுரம் 27ராசிபுரம் தனி பாட்டா௭.ளி […]
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற கடம்பூர் ராஜு மீண்டும் இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் கோவில்பட்டி தொகுதி மட்டும் கடந்த தேர்தலில் அதிமுக வசமானது. ஏற்கனவே இரண்டு முறை தொடர்ந்து இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கடம்பூர் ராஜுவுக்கு கடந்த தேர்தலில் அமமுக சார்பில் டி.டி.வி.தினகரன் கடும் போட்டியாக இருந்தார், இருப்பினும் கோவில்பட்டி தொகுதியில் தினகரனை வீழ்த்தி தொகுதியை கடம்பூர் ராஜு […]
அ.தி.மு.க. கூட்டணியில் இதுவரை பா.ஜ.க.வுக்கு 27, பா.ம.க.வுக்கு 18, அ.ம.மு.க.வுக்கு 11, த.மா.கா.வுக்கு 5, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்றாலும், இரு கட்சிக்கும் தலா 2 தொகுதிகள் வழங்கப்படும் என தெரிகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இதுவரை கூட்டணி கட்சிக்கு 62 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்னும் 6 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கினாலும், 163 தொகுதிகளில் அ.தி.மு.க. நேரடியாக களம் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு மற்றும் காவல்துறை போன்ற அரசு வாகனங்களை தவிர அங்கீகரிக்கப்படாத தனியார் வாகனங்களில் சிவப்பு-நீல நிற ஸ்ட்ரோப் விளக்குகளை (Red–Blue Strobe Lights) பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை அறிவிப்பு – தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 38 வாகனங்களில் ஸ்ட்ரோப் விளக்குகள் அகற்றம். சிவப்பு-நீல நிற ஸ்ட்ரோப் விளக்குகளை தற்போது தனியார் வாகனங்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த விளக்குகள் அவசர வாகனங்களான ஆம்புலன்ஸ், […]
முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் கூறி இருப்பதாவது:- அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார். இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக மட்டுமல்ல, நல்ல நண்பர்களாக நாங்கள் இருவரும் இருதரப்புக் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம். […]
2026 சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடப் போவதில்லை என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்; இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து கமல்ஹாசன் எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேச நலனுக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இணைந்தோம். கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். அதன் விளைவாக மக்கள் நீதி மய்யத்தின் குரல் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஒலித்தது.அப்போது முதல் இன்று வரை நம்முடைய தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல், கூட்டணி தர்மத்தை […]
கோவில்பட்டியை தூய்மையாகவும், பசுமையாகவும் மாற்றுவதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் கோவில்பட்டி சௌபாக்யா மஹாலில் நடைபெற்றது. கோவில்பட்டி பசுமை- தூய்மை இயக்கத்தின் தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் விநாயகா ரமேஷ், செயலாளர் ஆசியா பார்ம்ஸ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் அபிராமி முருகன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் அறிமுகவுரை ஆற்றினார். திண்டுக்கல் வாஷ் இன்ஸ்டிடியூட் இயக்குனர் டாக்டர் ஆறுமுகம் காளிமுத்து கருத்துரை வழங்கினார். வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் நிகழ்ச்சியை தொகுத்து […]
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ந் தேதி நடக்கிறது, இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரசாரத்தை நாளை மார்ச் 25 தொடங்குகிறார். ஏப்ரல் 1 -ந் தேதி வரை அவர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் பகுதிகள் விவரம் வருமாறு:- மார்ச் 25 புதன்கிழமை:- சென்னை மைலாப்பூர் -பிற்பகல் 3.30 மணி.] 27.3..2026 வெள்ளிக்கிழமை:- காஞ்சீபுரம் மாவட்டம் ஆலந்தூர், மாலை 4 மணி, -செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம். மாலை 6 […]







