கோவில்பட்டி பசுமை – தூய்மை இயக்கம் விழிப்புணர்வு கருத்தரங்கம்

கோவில்பட்டியை தூய்மையாகவும், பசுமையாகவும் மாற்றுவதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் கோவில்பட்டி சௌபாக்யா மஹாலில் நடைபெற்றது.
கோவில்பட்டி பசுமை- தூய்மை இயக்கத்தின் தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் விநாயகா ரமேஷ், செயலாளர் ஆசியா பார்ம்ஸ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் அபிராமி முருகன் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் அறிமுகவுரை ஆற்றினார். திண்டுக்கல் வாஷ் இன்ஸ்டிடியூட் இயக்குனர் டாக்டர் ஆறுமுகம் காளிமுத்து கருத்துரை வழங்கினார். வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். துணைத் தலைவர் தமிழரசன் நன்றி கூறினார்.
நிகழ்வில் பொருளாளர் ராகவன், புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமணபெருமாள், ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் , உலக திருக்குறள் கூட்டமைப்பு முத்துச்செல்வம்,தொழிலதிபர்கள் வெங்கடேஷ், பாபு, எழுத்தாளர் முருகேஸ்வரி, தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மேரி ஷீலா, இசை ஆசிரியர் அமலபுஷ்பம், முருக சரஸ்வதி, ராமலட்சுமி, துரைராஜ், லெனின், பாலாஜி, இந்திய கலாச்சார நட்புறவு கழகம் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள், வணிகர் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், மருத்துவர்கள், தொழில் முனைவோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்,








