எடப்பாடி பழனிசாமி நாளை தேர்தல் பிரசாரம் தொடக்கம்; 30-ந்தேதி மாலை கோவில்பட்டியில் வாக்கு சேகரிக்கிறார்
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ந் தேதி நடக்கிறது, இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரசாரத்தை நாளை மார்ச் 25 தொடங்குகிறார். ஏப்ரல் 1 -ந் தேதி வரை அவர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் பகுதிகள் விவரம் வருமாறு:-

மார்ச் 25 புதன்கிழமை:- சென்னை மைலாப்பூர் -பிற்பகல் 3.30 மணி.]
27.3..2026 வெள்ளிக்கிழமை:- காஞ்சீபுரம் மாவட்டம் ஆலந்தூர், மாலை 4 மணி, -செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம். மாலை 6 மணி
28.3..2026 சனிக்கிழமை:- சென்னை ஆர்/கே/நகர்.-மாலை 4 மணி. திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர்-மாலை 6 மணி,.
29..3.2026 ஞாயிறு:- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்-மாலை 4.30 மணி திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம்- மாலை 5.30 மணி,
30.3.2026 திங்கள்: தென்காசி மாவட்டம் கடையநல்லூர்-மாலை 4 மணி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி-மாலை 6 மணி
31.3.2026 செவ்வாய்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி-மாலை 4 மணி. , ராமநாதபுரம் மாவட்டம்-பரமக்குடி-மாலை 6 மணி,.
1.4.2026 புதன்: சிவகங்கை மாவட்டம் சிவகங்கை- மாலை 4 மணி, புதுக்கோட்டை மாவட்டம்—புதுக்கோட்டை-மாலை 6 மணி,
மேற்கண்ட நாட்களில் அந்தந்த தொகுதி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிக்கிறார்.








