கோவில்பட்டி கல்லூரியில் வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி; 480 மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்

கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி படிப்புடன் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
கம்ப்யூட்டர் தொடர்பான ரோபாட்டிக்ஸ், லேப்டாப், மொபைல் பழுதுநீக்க பயிற்சி, இலகுரக வாகன ஓட்டுனர் பயிற்சி, அழகுகலை பயிற்சி, ஆரிஒர்க், வங்கி, காவலர் உள்ளிட்ட மத்திய மாநில அரசு தேர்வுக்கான பயிற்சிகள், ஸ்போக்கன் இங்கிலிஷ், சுருக்கெழுத்து, சிலம்பம், உள்ளிட்ட பயிற்சிகள் 6 மாதம் முதல் 1 வருடம் வரை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பயிற்சி முடித்த 480 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கல்லூரியில் நடந்த இதற்கான நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் தலைவர் எஸ்.ஆர்.ராஜரத்தினம், ரோட்டரி சங்க துணைத் தலைவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி பேராசிரியர் ஸ்ருதி அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சீனியர் மேலாளர் ஆறுமுக கனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசினார்.

நிகழச்சியில் கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அருண்,ராஜ்மோகன், கல்லூரி முதல்வர் செல்வராஜ், டி.எம்.பி வங்கி உதவி மேலாளர் மகேஸ்வரன்,கல்லூரி பேராசிரியர்கள் செல்வ லட்சுமி, பிரியங்கா, செல்வம், ரமேஷ், செல்லத்துரை, ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கல்லூரி பேராசிரியர் கற்குவேல்ராஜ் நன்றி கூறினார்.







