திமுக கூட்டணியில் வி.சி.க.வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்டு வந்தது,.அதற்கு திமுக தரப்பில் சம்மதிக்கவில்ல்லை.
இந்த முறை கூட்டணியில் புதிதாக கட்சிகள் சேர்ந்து இருப்பதால் அனைவருக்கும் தொகுதிகள் பிரித்து தரவேண்டியது இருக்கிறது,. எனவே கூடுதல் தொகுதிகள் ஒதுக்க இயலாது என்று கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறி விட்டார்.

இருப்பினும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது, இதனால் தொகுதி பங்கீட்டில் முடிவு ஏற்படாமல் இழுபறி ஏற்பட்டது,.
இந்த நிலையில் இன்று (மார்ச் 24) திமுக தலைவரும் முதலமைசருமான மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் தொகுதி உடன்பாடு குறித்து சந்தித்து பேசியதில் முடிவு ஏற்பட்டது,

அதன்படி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாட்டில் மொத்தம் 8 (எட்டு) சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதெனவும் – அவற்றில் 6 தனித் தொகுதிகளிலும் 2 பொது தொகுதிகளிலும் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது.
இதற்கான ஒப்பந்தத்தில் ஸ்டாலின், திருமாவளவன் இருவரும் கையெழுத்திட்டனர்.







