3 முறை தொடர் வெற்றி பெற்ற கடம்பூர் ராஜு மீண்டும் கோவில்பட்டியில் போட்டி
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற கடம்பூர் ராஜு மீண்டும் இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் கோவில்பட்டி தொகுதி மட்டும் கடந்த தேர்தலில் அதிமுக வசமானது. ஏற்கனவே இரண்டு முறை தொடர்ந்து இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கடம்பூர் ராஜுவுக்கு கடந்த தேர்தலில் அமமுக சார்பில் டி.டி.வி.தினகரன் கடும் போட்டியாக இருந்தார்,

இருப்பினும் கோவில்பட்டி தொகுதியில் தினகரனை வீழ்த்தி தொகுதியை கடம்பூர் ராஜு கைப்பற்றினார்.
ஏப்ரல் 23 அன்று நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்துள்ளது. மேலும் இந்த கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன,.
நடைபெற இருக்கும் தேர்தலில் கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளராக கடம்பூர் ராஜ அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தொடர்ந்து மூன்று முறை வெற்றி கண்ட தொகுதியில் கடம்பூர் ராஜு நான்காவது முறையாக போட்டியிடுகிறார்,.
கடந்த தேர்தலில் எதிர் அணியில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்த அமமுக இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இதனால் அதிமுகவுக்கு வெற்றி எளிதாக இருக்கும் என்று அக்கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.,
இருப்பினும் இந்த முறை பிரசாரத்தை தீவிரப்படுத்தி கடந்த முறையை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டும் என்று வேட்பாளர் கடம்பூர் ராஜு திட்டமிட்டுள்ளார்,.

வேட்பாளர் கடம்பூர் ராஜு ,நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவர். 1958 ,ம் ஆண்டு : ஆகஸ்டு 20, ந் தேதி பிறந்தார்.கடம்பூர் அருகே உள்ள சிதம்பராபுரம் சொந்த ஊராகும்.
பி.யூ.சி. படிப்பை முடித்து, பின்னர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றார். பின் அவரது சொந்த ஊரில் உள்ள இந்து தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
அதிமுக வில் சேர்ந்து 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்காக ஆசிரியர் பணியில் இருந்து விலகினார். இவர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு முழுநேர அரசியல்வாதி ஆனார்.
பின்னர் மீண்டும் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்று தமிழக அமைச்சரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அதன்பிறகு 2021 ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.[3]தற்போது நான்காவது முறையாக போட்டியிடுகிறார்.
கடம்பூர் ராஜுவுக்கு இந்திரா காந்தி என்ற மனைவியும், அருண்குமார் என்ற மகனும், காயத்ரி என்ற மகளும் உள்ளனர்.







