தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும், அதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்கவும் வலியுறுத்தியும், விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இதற்காக அவர் நாளை மதியம் 1.30 மணிக்கு விமானம் மூலம் கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் மாநாடு […]
தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் தீவிர பட்டியல் சீர்திருத்தம் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை புறக்கணிக்க வருவாத்துறை சங்கம் முடிவு செய்துள்ளது. அதீத பணி நெருக்கடிகளை களைந்திட வலியுறுத்தி நாளை எஸ்.ஐ.ஆர். பணிகள் புறக்கணிக்கப்படுகிறது. இது தொடர்பாக வருவாய் துறை கூட்டமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கிய கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில் நிலவியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் மெதுவாக நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக, கடலோர தமிழகத்தில் அனேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான […]
கார்த்திகை மாதம் தொடக்கம்: கோவில்பட்டியில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக செல்வார்கள். தமிழகத்தில் இருந்து அதிக அளவில் அய்யப்ப பக்தர்கள் சபரிமலை செல்வது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் \ கார்த்திகை மாதத்தில் முதல் நாள் அய்யப்ப பக்தர்கள் மற்றும் திருச்செந்தூர் செல்லும் முருக […]
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள தெற்கு காக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கஜேந்திர பிரபு. இவருடைய மனைவி அல்லிராணி. இவர்களது மகள் ஜோதி மலர் (வயது 28). இவர் சென்னை ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு புனேயில் நடைபெற்ற தேசிய அளவிலான மிஸ் டூரிசம் அம்பாசிடர் ஹெரிடேஜ் இந்தியா 2025 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பட்டம் வென்றார். பின்பு தாய்லாந்தில் கடந்த 8-ந் தேதி நடைபெற்ற மிஸ் […]
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி, விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (55). இவருக்கு, ஆறுமுகநேரி தனியார் ரசாயன ஆலை பின்புறம் 10 ஏக்கரில் உப்பளம் உள்ளது. கடந்த 12-ம் தேதி இவரது உப்பளத்தில் குவித்து வைத்திருந்த உப்பை சிலர் லாரிகளில் ஏற்றி கொண்டிருந்தனர். இதை அறிந்த மகேஷ் உப்பளத்திற்கு விரைந்து சென்று, உப்பை திருடி கொண்டிருந்தவர்களை கண்டித்துள்ளார். இதில், ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள் மகேசை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து விட்டு லாரிகளை ஓட்டிச் […]
கோவில்பட்டியில் 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் ஆக்கி: ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் அணி
உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டியை கொண்டாடும் விதமாக கோவில்பட்டியில் ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் நடத்தும் மாவட்ட அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆக்கி போட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.இப்போட்டியில் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இன்று காலை நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் 7-0 என்று கோல் கணக்கில் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியை தோற்கடித்தது. இன்னொரு அரை இறுதிப் […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்டச்செயலாளர் சுரேஷ் தலைமையில் கோவில்பட்டயில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் டிசம்பர் 28 ல் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் அவரது நினைவாலயத்தில் குருபூஜையில் கலந்து கொள்வது மற்றும் ஜனவரி 9 ம் தேதி கடலூரில் நடைபெறும் மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் நமது மாவட்டம் சார்பில் பெருந்திரளாக கலந்து கொள்ளவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பூத்கமிட்டி அமைத்து […]
திருப்பூரில் திருமண விழாவில் பழங்காலத்து மரபுப்படி பனியன் அணிந்தபடி மணமகளுக்கு தாலி கட்டிய
தமிழகத்தின் “டாலர் சிட்டி” என்று அழைக்கப்படும் நகரம் திருப்பூர். உலக நாடுகள் தங்களது ஆடை உற்பத்திக்கு முதலில் தேர்வு செய்யும் நகரமாக திருப்பூர் விளங்குகிறது. பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தொழிலில் இந்த நகரம் மிகவும் சிறந்து விளங்குகிறது. சமீபத்தில் நடந்த ஆய்வில் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பட்டியலில் ஆறாவது இடத்தைப் திருப்பூர் பெற்றுள்ளது. திருப்பூரில் நடைபெறும் பெரும்பாலான திருமண நிகழ்வுகளில் உள்ளாடைகள் தயாரிப்பு தொழிலுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் மணமகன் மணமேடையில் வேட்டியுடன் […]
தூத்துக்குடியில் 72ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி, 186 பேருக்கு ரூ. 10.15 கோடி மதிப்பிலான கடனுதவிகளை அமைச்சர் பி. கீதா ஜீவன் வழங்கினார். விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சரக துணைப் பதிவாளர் மு. கலையரசி உறுதிமொழி வாசித்தார். மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் கோ. காந்திநாதன் திட்டவிளக்கவுரையாற்றினார். சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கூட்டுறவுக் கொடியை ஏற்றிவைத்து, […]







