கார்த்திகை மாதம் தொடக்கம்: கோவில்பட்டியில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக செல்வார்கள்.
தமிழகத்தில் இருந்து அதிக அளவில் அய்யப்ப பக்தர்கள் சபரிமலை செல்வது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் \ கார்த்திகை மாதத்தில் முதல் நாள் அய்யப்ப பக்தர்கள் மற்றும் திருச்செந்தூர் செல்லும் முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குவது வழக்கம்.

கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள மூக்கரை பிள்ளையார் கோவிலில் இன்று அதிகாலை முதல் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் இருந்து மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர். ஏராளமான சிறுவர் சிறுமிகளும் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர்.
40 வருடத்திற்கு மேலாக சபரிமலை சென்று வந்த ஆறுமுக குருசாமி தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் மாலை அணிந்தனர் இதில் முதல் ஆண்டு சபரிமலை செல்லும் கன்னிச்சாமி 20 ஆண்களும் பெண்களும் மாலை அணிந்தனர்

இதே போல் சபரிமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் ஏராளமானோர் பல்வேறு கோவில்களில் தரிசனம் செய்து மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர்.
கோவில்பட்டி மூக்கரை விநாயகர் கோவிலில் மட்டும் சஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதம் தொடங்கினர்.







