கடலூர் அருகே உள்ள கீழ்அருங்குணத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 34), விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தாமோதரன் (55) என்பவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தாமோதரன் தரப்பை சேர்ந்த தங்கவேல் என்பவர் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைதான சுபாஷ் ஜாமீனில் வெளியே வந்தார். மேலும் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த […]
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சமீப காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவசர கதியில் தனக்குப் பழக்கமான அவதூறு அரசியல் ஆட்டத்தைத் தொடங்கி உள்ளது. எந்தக் கட்சியைச் சொல்கிறோம் என்று தெரிகிறதா? அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி வேறு எந்தக் கட்சியாக இருக்கும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இப்போதெல்லாம் அந்தக் கட்சியின் […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா கடந்த 4-ம் தேதி அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு மண்டகப்படிக்காரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் மற்றும் காலையில் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்கள், சப்பரங்களிலும் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் வந்து காட்சி நிகழ்ச்சி நடந்து வருகிறது. விழாவின் 9-ம் நாளான இன்று(புதன்கிழமை) காலை தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் […]
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் வேளாண்மை உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் அறிவழகன். இவர் ஓட்டப்பிடாரம் வேளாண்மை துறை அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்த வெளியூர் பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. மேலும் உதவி இயக்குனர் அறிவழகன் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசும் ஆடியோவும் வெளியானது. இதைத்தொடர்ந்து வேளாண்மை துறை உதவி இயக்குனர் அறிவழகன் மீது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆட்சித் தலைவர் இளம் பகவத் இது தொடர்பாக விசாரணை நடத்த […]
கோவை முதலிபாளையத்தில் தனியார் மண்டபத்தில் பாஜக நிர்வாகிகள் மத்தியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில் கூறியதாவது:- மத்தியில் ஆளும் பாஜகவின் திட்டங்கள் பெண்களை முன்னிறுத்திய உள்ளன. பிரதமர் அறிவிப்பை தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து சட்டங்களையும் நிறைவேற்றுகிறார்கள். பிரதமர் மோடிக்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாது என அவரது திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். பேரவையில் பலம் இருக்கிறது என்பதால் பிரதமருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். ஜல்லிக்கட்டை நிறுத்தியது காங்கிரஸ், அதற்கு திமுக ஒத்துழைத்தது. ஜல்லிக்கட்டு தமிழக கலாசாரம் […]
எஸ்.ஐ.ஆர். என்பது வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவதற்காகவே செய்யப்படும் சீராய்வாகும். கனிமொழி
இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வுக்கு (S.I.R.) எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மற்றும் நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவரான கனிமொழி தலைமையில், தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:- இந்த எஸ்.ஐ.ஆர்.-ஐ எதிர்த்து ஏன் திராவிட முன்னேற்ற கழகமும் அதன் கூட்டணி இயக்கங்களும் ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டிருக்கிறது? […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி வளாகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் கண்களில் கருப்பு துணி கட்டி, கையில் நியாய தராசுவுடன் ஆர் ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு :- *சாலைப் பணியாளர்களின் 41-மாத பணிநீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் *சென்னை உயர்நீதிமன்ற மேல் முறையீட்டினை திரும்ப பெற வேண்டும்,*மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க வேண்டும்,
கோவில்பட்டி பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா நடந்து வருகிறது. விழாவின் 7ம் நாள் மண்டகப்படி நேற்று சைவ வேளாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது. இதை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது தொடர்ந்து, அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா 7ம் நாள் மண்டகப்படி சைவ வேளாளர்கள் சங்கம் தலைவர் தெய்வேந்திரன், செயலாளர் நடராஜன், பொருளாளர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் முத்துகிருஷ்ணன், […]
கோவில்பட்டியில் பேர்ட்ஸ் தொண்டு நிறுவனம் சார்பாக நேரு பிறந்தநாள் , ஆசிரியர் தினம்,உள்ளாட்சி தினம் என முப்பெரும் விழா காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு நிறுவனத்தலைவர் திருமலை முத்துசாமி தலைமை தாங்கி,விருது வழங்கி, சிறப்புரையாற்றினார். வழக்கறிஞர் கர்ணன்,பேராசிரியர் மாரியப்பன்,இலக்கிய ஆர்வலர்கள் சுப்புலட்சுமி திரிபுரநாதன், நாகரத்தினம், ஹேச்எம்எஸ் இணைச்செயலாளர் வினோபா, பிரம்மா குமாரிகள் அமைப்பு பொறுப்பாளர்கள் பிரம்மாகுமார், பாலசுந்தரம், வில்லிசைக்கலைஞர் மாரியப்பன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ரவீந்திரன், ஆசிரியர் சண்முகக்கனி, வரகனூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி, துணைத் […]
தமிழ்நாடு பள்ளி ஆக்கி லீக் போட்டி திருச்சியில் 12 -ந்தேதி முதல் 16ஆம் தேதி வரை அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.. இப்போட்டியில் 12 அணிகள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன தூத்துக்குடி மண்டல ஒருங்கிணைந்த ஆக்கி அணியின் பயிற்சி முகாம் கடந்த நான்கு நாட்களாக கோவில்பட்டி செயற்கை புல் ஆக்கி மைதானத்தில் நடைபெற்றது இப்பயிற்சி முகாமில் 25 மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இவர்களில் 18 வீரர்கள் கொண்ட தூத்துக்குடி மண்டல ஒருங்கிணைந்த ஆக்கி அணி […]







