கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம்
கோவில்பட்டிஸ்ரீ ராக வேந்திரா சேவா அறக்கட் டளை சார்பாக ஒவ்வொரு மாதமும் அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருக் கிறது.. இதன் தொடர்ச்சியாக அறக்கட்டளையின் 50 வது அன்னதானம் உலக மக்கள் நலன் மற்றும், விவசாயம் செழிக்க வேண்டி புதுக் கிராமம் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் நடைபெற் றது. இந்நிகழ்ச்சிக்கு நகர் மன்ற உறுப்பினர் சண்முகவேல் வர வேற்றார். சிவ மூர்த்தி, ஸ்டாலின், ஜீவ அனுக் கிரக அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந் நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி மண்டல துணை வட்டாட்சியர் பாலு தலைமை தாங்கினார்.. சிறப்பு அழைப்பாளர்களாக தொழிலதிபர்கள் அருண் பேக்கரி மாடசாமி, கோவில் பட்டி கடலை மிட்டாய் வியாபாரிகள் சங்க தலைவர் கார்த்தீஸ்வரன், தினேஷ் பாலாஜி. கோவில்பட்டி பிள்ளையார் நத்தம் விஏஓ மந்திர சூடாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்,
கோவில்பட்டி பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப் பன் அன்னதானத்தை தொட க்கி வைத்தார், இந்நிகழ்ச்சியில் ராகவேந்திரா அறக்கட்டளை நிறுவ னர் சீனிவாசன் ,தலைவர் ஜெயக்கொடி, செயலாளர் ஜோதி காமாட்சி, பொருளா ளர் கார்த்திகேயன், மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தங்கராஜ், எஸ் பி பாண்டி யன், காளியப்பன், மிலிட் டரி சந்திரசேகர், முருகன் ஆகியோர் கலந்து கொண்ட னர். முடிவில் கார்த்தி கேயன் நன்றி கூறினார்.







