கோவில்பட்டி அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து
கோவில்பட்டி அருகே கொடுக்காம்பாறையில் செயல்படும் கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோவில்பட்டி நோக்கிச் வந்து கொண்டிருந்தது.
விஜயாபுரி-தெற்கு திட்டங்குளம் சாலையில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றி வரும் லாரிகள் அதிவேகமாக செல்வதால், வேகத் தடைகளை கடந்து செல்லும்போது லாரியில் உள்ள கற்கள் சாலைகளில் சிதறுகின்றன.
லாரியில் கொண்டு செல்லும் கற்களை தார்ப்பாய்களால் மூடாமல் செல்கின்றனர். இதனால், சாலைகள் சேதமடைவது மட்டுமின்றி, அந்த பகுதி வாழ் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இதைத் தடுக்க காவல் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மேலும் இந்த சாலையில் பல இடங்களில் குண்டு குழியுமாக உள்ளது,. இதை சரி செய்வதுடன் சாலையை அகலபடுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,







