“நல்ல பிள்ளைகளைப் பெரிதும் உருவாக்குவது வீடா? நாடா?” – பட்டிமன்றம்
கோவில்பட்டி அருகே என். சுப்பையாபுரம் அரசு மேல்நிலை.பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் முனியப்பன் தலைமை தாங்கினார். தமிழாசிரியர் இராஜசேகர் அனைவரையும் வரவேற்றார்..
நிகழ்ச்சியில் “நல்ல பிள்ளைகளைப் பெரிதும் உருவாக்குவது வீடா? நாடா?” “என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்தின் நடுவராக நாடார் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் பணியாற்றினார்.

வீடே என்ற அணியில், விநாயக சுந்தரி, முருகேசன் ஆகியோரும், நாடே என்ற அணியில் கிருஷ்ணன், செல்வம் ஆகியோரும் வாதிட்டனர்…
முடிவில், நல்ல பிள்ளைகளைப் பெரிதும் உருவாக்குவது நாடே என்ற முடிவினை நடுவர் ஜான் கணேஷ் அறிவித்தார்.
நிகழ்ச்சியில், முன்னாள் வேளாண் ஆசிரியர் சுரேஷ்குமார், சகாராவைத் தாண்டாத ஒட்டகம் கல்வி நிறுவனர் தினகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்… இடைநிலை ஆசிரியை காந்திமதி நன்றி கூறினார்…







